O Lord of Vēṅkaṭam! Come to this Servant!
வேங்கடத்தானே! அடியேன்பால் வாராய்!
3449 நோலாதாற்றேன்உனபாதம் காணவென்று நுண்ணுணர்வின் *
நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனுமிந்திரனும் *
சேலேய்கண்ணார்பலர்சூழவிரும்பும் திருவேங்கடத்தானே! *
மாலாய்மயக்கிஅடியேன்பால் வந்தாய்போலவாராயே.