O Lord! I Have Attained Your Holy Feet.
பெருமானே! நின் திருவடி சேர்ந்துவிட்டேன்
3451 அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறைமார்பா! *
நிகரில்புகழாய்! உலகமூன்றுடையாய்! என்னையாள்வானே! *
நிகரிலமரர்முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே! *
புகலொன்றில்லாஅடியேன் உன்னடிக்கீழமர்ந்துபுகுந்தேனே. (2)