Sing These Verses: One Can Abide in the Celestial World.
இவற்றைப் பாடுக: வானுலகில் தங்கலாம்
3452 அடிக்கீழமர்ந்துபுகுந்து அடியீர்! வாழ்மினென்றென்றருள்கொடுக்கும் *
படிக்கேழில்லாப்பெருமானைப்பழனக்குருகூர்ச்சடகோபன் *
முடிப்பான்சொன்னவாயிரத்துத் திருவேங்கடத்துக்கிவைபத்தும் *
பிடித்தார்பிடித்தார்வீற்றிருந்து பெரியவானுள்நிலாவுவரே. (2)