O Tirumāl! When Will I Unite with You?
திருமாலே ! நின்னை என்று நான் கூடுவேன்?
3339 திருவுருவுகிடந்தவாறும் கொப்பூழ்ச்செந்தாமரைமேல் * திசைமுகன்
கருவுள்வீற்றிருந்து படைத்திட்டகருமங்களும் *
பொருவிலுந்தனிநாயகமவை கேட்குந்தோறும் என்னெஞ்சம்நின்று நெக்கு *
அருவிசோரும்கண்ணீர் என்செய்கேன்? அடியேனே.