O Lord on the Serpent Couch! Tell Me the Way to Seek You.
நாகணையாய்! நின்னை நான் நாடும் வண்ணம் சொல்
3340 அடியைமூன்றையிரந்தவாறும் அங்கேநின்றாழ்கடலும் மண்ணும்விண்ணும்
முடிய * ஈரடியால் முடித்துக்கொண்டமுக்கியமும் *
நொடியுமாறவைகேட்குந்தோறும் என்னெஞ்சம் நின்தனக்கேகரைந்துகும் *
கொடியவல்வினையேன் உன்னையென்றுகொல்கூடுவதே?