O Our Lord! Your Nature Melts and Consumes My Soul.
எம்பிரானே! நின் தம்மை என் உயிரை உருக்கியுண்ணும்
3335 கள்ளவேடத்தைக்கொண்டுபோய்ப் புரம்புக்கவாறும் * கலந்தசுரரை
உள்ளம்பேதஞ்செய்திட்டு உயிருண்டவுபாயங்களும் *
வெள்ளநீர்ச்சடையானும் நின்னிடைவேறலாமைவிளங்க நின்றதும் *
உள்ளமுள்குடைந்து என்னுயிரையுருக்கியுண்ணுமே.