O Primal Lord! When Will I Approach You?
முதல்வா! உன்னை என்று நெருங்குவேன்?
3333 வதுவைவார்த்தையுளேறுபாய்ந்ததும் மாயமாவினை வாய்பிளந்ததும் *
மதுவைவார்குழலார் குரவைபிணைந்தகுழகும் *
அதுவிதுவுதுவென்னலாவனவல்ல என்னைஉன்செய்கை நைவிக்கும் *
முதுவையமுதல்வா! உன்னையென்றுதலைப்பெய்வனே?