O Luminous Flame! When Will I Reach You?
சுடரே! உன்னை நான் என்று சேர்வேன்?
3332 பிறந்தவாறும்வளர்ந்தவாறும் பெரியபாரதம் கைசெய்து * ஐவர்க்குத்
திறங்கள்காட்டியிட்டுச் செய்துபோனமாயங்களும் *
நிறந்தனூடுபுக்குஎனதாவியை நின்றுநின்றுஉருக்கி யுண்கின்ற * இச்
சிறந்தவான்சுடரே! உன்னையென்றுகொல்? சேர்வதுவே. (2)