Chapter 3

Joy upon uniting with the Lord - (கோவை வாயாள்)

எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்
As per parAnkusa nAyaki’s wishes, Bhagavān expressing His immense love and affection, joins her. Āzhvār focuses on His auspicious trait, pranayithva (fake quarrel between couples) in these hymns.
பராங்குச நாயகி ஆசைப்பட்டபடியே பகவான் அவரோடு வந்து கலந்து தன் பேரன்பை வெளியிட்டான். ஆழ்வார் அவனது பிரணயித்வ குணத்தை இப்பகுதியில் புலப்படுத்துகிறார்.

நான்காம் பத்து -மூன்றாந்திருவாய்மொழி – ‘கோவை வாயாள்’-பிரவேசம்

எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் உண்டான அவன் படிகள் எல்லாம் + Read more
Verses: 3145 to 3155
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கேசி
Timing: 10.49 - 12.00 PM
Recital benefits: will stay in this world happily and rule heaven
  • TVM 4.3.1
    3145 ## கோவை வாயாள் பொருட்டு *
    ஏற்றின் எருத்தம் இறுத்தாய் * மதிள் இலங்கைக்
    கோவை வீயச் சிலை குனித்தாய் *
    குல நல் யானை மருப்பு ஒசித்தாய் **
    பூவை வீயா நீர் தூவிப் *
    போதால் வணங்கேனேலும் * நின்
    பூவை வீயாம் மேனிக்குப் *
    பூசும் சாந்து என் நெஞ்சமே (1)
  • TVM 4.3.2
    3146 பூசும் சாந்து என் நெஞ்சமே *
    புனையும் கண்ணி எனதுடைய *
    வாசகம் செய் மாலையே *
    வான் பட்டு ஆடையும் அஃதே **
    தேசம் ஆன அணிகலனும் *
    என் கைகூப்புச் செய்கையே *
    ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த *
    எந்தை ஏக மூர்த்திக்கே (2)
  • TVM 4.3.3
    3147 ஏக மூர்த்தி இரு மூர்த்தி *
    மூன்று மூர்த்தி பல மூர்த்தி
    ஆகி * ஐந்து பூதம் ஆய்
    இரண்டு சுடர் ஆய் * அருவு ஆகி **
    நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற *
    நாராயணனே * உன்
    ஆகம் முற்றும் அகத்து அடக்கி *
    ஆவி அல்லல் மாய்த்ததே (3)
  • TVM 4.3.4
    3148 மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த *
    மாயப் பேய் உயிர்
    மாய்த்த * ஆய மாயனே! *
    வாமனனே! மாதவா! **
    பூத் தண் மாலை கொண்டு *
    உன்னைப் போதால் வணங்கேனேலும் * நின்
    பூத் தண் மாலை நெடு முடிக்குப் *
    புனையும் கண்ணி எனது உயிரே (4)
  • TVM 4.3.5
    3149 கண்ணி எனது உயிர் *
    காதல் கனகச் சோதி முடி முதலா *
    எண் இல் பல் கலன்களும் *
    ஏலும் ஆடையும் அஃதே **
    நண்ணி மூவுலகும் *
    நவிற்றும் கீர்த்தியும் அஃதே *
    கண்ணன் எம் பிரான் எம்மான் *
    கால சக்கரத்தானுக்கே (5)
  • TVM 4.3.6
    3150 கால சக்கரத்தொடு *
    வெண் சங்கம் கை ஏந்தினாய் *
    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த *
    நாராயணனே! என்று என்று **
    ஓலம் இட்டு நான் அழைத்தால் *
    ஒன்றும் வாராயாகிலும் *
    கோலம் ஆம் என் சென்னிக்கு *
    உன் கமலம் அன்ன குரைகழலே (6)
  • TVM 4.3.7
    3151 குரை கழல்கள் நீட்டி *
    மண் கொண்ட கோல வாமனா *
    குரை கழல் கைகூப்புவார்கள் *
    கூட நின்ற மாயனே **
    விரை கொள் பூவும் நீரும் கொண்டு *
    ஏத்தமாட்டேனேலும் * உன்
    உரை கொள் சோதித் திரு உருவம் *
    என்னது ஆவி மேலதே (7)
  • TVM 4.3.8
    3152 என்னது ஆவி மேலையாய் *
    ஏர் கொள் ஏழ் உலகமும் *
    துன்னி முற்றும் ஆகி நின்ற *
    சோதி ஞான மூர்த்தியாய் **
    உன்னது என்னது ஆவியும் *
    என்னது உன்னது ஆவியும் *
    இன்ன வண்ணமே நின்றாய் *
    என்று உரைக்க வல்லேனே? (8)
  • TVM 4.3.9
    3153 உரைக்க வல்லேன் அல்லேன் *
    உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் *
    கரைக்கண் என்று செல்வன் நான்? *
    காதல் மையல் ஏறினேன் **
    புரைப்பு இலாத பரம்பரனே *
    பொய் இலாத பரஞ்சுடரே *
    இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த *
    யானும் ஏத்தினேன் (9)
  • TVM 4.3.10
    3154 யானும் ஏத்தி * ஏழ் உலகும் முற்றும் ஏத்தி * பின்னையும்
    தானும் ஏத்திலும் * தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்? **
    தேனும் பாலும் கன்னலும் * அமுதும் ஆகித் தித்திப்ப *
    யானும் எம் பிரானையே ஏத்தினேன் * யான் உய்வானே (10)
  • TVM 4.3.11
    3155 ## உய்வு உபாயம் மற்று இன்மை தேறிக் *
    கண்ணன் ஒண் கழல்கள் மேல் *
    செய்ய தாமரைப் பழனத் *
    தென்னன் குருகூர்ச் சடகோபன் **
    பொய் இல் பாடல் ஆயிரத்துள் *
    இவையும் பத்தும் வல்லார்கள் *
    வையம் மன்னி வீற்றிருந்து *
    விண்ணும் ஆள்வர் மண்ணூடே (11)