Praise and Worship Tirukkurukūr.
திருக்குருகூரைப் போற்றி வணங்குங்கள்
3223 நாடிநீர்வணங்கும்தெய்வமும் உம்மையுமுன் படைத்தான் *
வீடில்சீர்புகழாதிப்பிரான் அவன்மேவியுறைகோயில் *
மாடமாளிகைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை *
பாடியாடிப்பரவிச்சென்மின்கள் பல்லுலகீர்! பரந்தே.