Even if a Devotee of Kaṇṇaṉ is an Outcaste, the Servant of His Servant is Our Chief.
கண்ணனின் அடியார் சண்டாளராயினும் அவரது அடியார்க்கு அடியார் எம் தலைவர்
3087 குலந்தாங்குசாதிகள் நாலிலுங்கீழிழிந்து * எத்தனை
நலந்தானிலாத சண்டாளசண்டாளர்களாகிலும் *
வலந்தாங்குசக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று உள்
கலந்தார் * அடியார்தம்அடியார் எம்மடிகளே.