The Servants of Those Who Praise Tirumāl are Our Masters.
திருமாலைப் புகழ்வோரின் அடியார்கள் நம் ஸ்வாமிகள்
3083 பெருமக்களுள்ளவர்தம்பெருமானை * அமரர்கட்கு *
அருமையொழிய அன்றாரமுதூட்டியவப்பனை *
பெருமைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர் *
வருமையுமிம்மையும் நம்மையளிக்கும்பிராக்களே.