Chapter 5

The great joy attained by Āzhvār through union with Emperumān - (அம் தாமத்து)

இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்
These divine hymns enumerate the joy-filled experience of Āzhvār when Bhagavān decides to put a stop to Āzhvār’s separation anxiety and despair by reuniting with him.
ஆழ்வார் படும் வருத்தம் தீருமாறு பகவான் வந்து ஆழ்வாரோடு கலந்ததை மகிழ்ந்து பேசும் பாடல்கள் இவை.
Verses: 2945 to 2955
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will reach Vaikuntam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 2.5.1

2945 அந்தாமத்தன்புசெய்து என்னாவிசேரம்மானுக்கு *
அந்தாம வாழ்முடிசங்கு ஆழிநூலாரமுள *
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம் *
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. (2)
2945 ## அம் தாமத்து அன்பு செய்து * என் ஆவி சேர் அம்மானுக்கு *
அம் தாமம் வாழ் முடி சங்கு * ஆழி நூல் ஆரம் உள **
செந்தாமரைத்தடம் கண் * செங்கனி வாய் செங்கமலம் *
செந்தாமரை அடிகள் * செம்பொன் திரு உடம்பே (1)
2945 ## am tāmattu aṉpu cĕytu * ĕṉ āvi cer ammāṉukku *
am tāmam vāzh muṭi caṅku * āzhi nūl āram ul̤a **
cĕntāmaraittaṭam kaṇ * cĕṅkaṉi vāy cĕṅkamalam *
cĕntāmarai aṭikal̤ * cĕmpŏṉ tiru uṭampe (1)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord resides in my soul, viewing it as a lovely spiritual world. He wears a beautiful garland, a dazzling crown, and carries the conch and discus, with a sacred thread and chain. His eyes are like red lotus ponds, and His lips and feet also glow like red lotuses. His presence shines like red gold.

Explanatory Notes

(i) It is the Lord’s will that the Āzhvār should be kept in this abode a little longer for the benefit of humanity at large. The Āzhvār, however, aspired to enter the gatherings of the celestials in the yonder spiritual world and sing the Lord’s glory profusely and for ever in their holy company. See II-3-10. As a compromise, the Lord meets the aspiration of the Āzhvār + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் தாமத்து நித்யஸூரிகளிடம் காட்டிய; அன்பு அன்பை என்னிடத்தில் பொழிந்த; செய்து பகவானின் அழகை என்ன என்று கூறுவேன்!; என் ஆவி சேர் என் ஆத்மாவிலே கலந்த; அம்மானுக்கு எம் பெருமானுக்கு; அம் தாமம் அழகிய மாலை அணிந்த; வாழ் முடி ஒளியுள்ள திருமுடி; சங்கு ஆழி சங்கு சக்கரம்; நூல் ஆரம் பூணுல் முத்து மாலைகள்; உள முதலியன உள்ளன; கண் கண்கள்; செந்தாமரைத்தடம் செந்தாமரைத் தடாகமாக இருக்கின்றன; செங்கனி வாய் சிவந்து கனிந்த பழம் போன்ற அதரம்; செங்கமலம் சிவந்த தாமரையாகவே இருக்கிறது; அடிகள் திருவடிகளும்; செந்தாமரை தாமரைமலராகவே தோன்றுகின்றன; திரு உடம்பே திரு உடம்போ; செம் பொன் செய்து செம் பொன்னாகவே உள்ளது
andhāmaththu in paramapadham; anbu attachment; seydhu having; en āvi in my heart (me who is not favourable); sĕr well-placed; ammānukku to the natural master; am beautiful; dhāmam having garland; vāl̤ radiant; mudi crown; sangu āzhi divine weapons chakra (disc) and ṣanka (conch); nūl yagyŏpavītham (sacred thread); āram divine garland; ul̤a they appeared; kaṇ divine eyes; sem thāmaraith thadam like a pond with red lotus flowers; sem reddish; kani like a ripened fruit; vāy mouth/lips; sem reddish; kamalam like a lotus flower; adikkal̤ divine feet; sem reddish; thāmarai like a lotus flower; thiru udambu divine body; sem pon like reddish gold

TVM 2.5.2

2946 திருவுடம்புவான்சுடர் செந்தாமரைக்கண் கைகமலம் *
திருவிடமேமார்பம் அயனிடமேகொப்பூழ் *
ஒருவிடமும் எந்தைபெருமாற்கரனேயோ! *
ஒருவிடமொன்றின்றி என்னுள்கலந்தானுக்கே.
2946 திரு உடம்பு வான் சுடர் * செந்தாமரை கண் கை கமலம் *
திரு இடமே மார்பம் * அயன் இடமே கொப்பூழ் **
ஒருவு இடமும் * எந்தை பெருமாற்கு அரனே ஓ *
ஒருவு இடம் ஒன்று இன்றி * என்னுள் கலந்தானுக்கே (2)
2946 tiru uṭampu vāṉ cuṭar * cĕntāmarai kaṇ kai kamalam *
tiru iṭame mārpam * ayaṉ iṭame kŏppūzh **
ŏruvu iṭamum * ĕntai pĕrumāṟku araṉe o *
ŏruvu iṭam ŏṉṟu iṉṟi * ĕṉṉul̤ kalantāṉukke (2)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

What a wonder! The Lord who carries Tiru (Lakṣmī) on His chest, whose navel is the seat of Brahmā while the rest is occupied by Araṉ, has mingled with me, filling every part of my body. My Father's body radiates rare brilliance, and His eyes and hands glow like red lotuses.

Explanatory Notes

(ī) Lakṣmī, the Divine Mother, stands ensconced on the Lord’s chest; Brahmā, the demi-urge, appointed by the Lord to create all the fourteen worlds, would not budge from His navel and the rest of the Lord’s body is occupied by Araṉ (Rudra). One so great has now come and taken possession of the entire body of the Āzhvār. Thrilled by his contact with the Lord’s exquisite + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒருவு இடம் வெற்றிடம்; ஒன்று இன்றி சிறிதும் இல்லாதபடி; என்னுள் என்னுள்; கலந்தானுக்கே கலந்த பெருமானின் சீலம் தான் என்னே!; எந்தை பெருமாற்கு எம் பெருமானின்; திரு உடம்பு அழகிய திருமேனி; வான் சுடர் சூரியனை ஒத்திருக்கிறது; கண் கண்கள்; செந்தாமரை சிவந்த தாமரை போன்று இருக்கின்றன; கை கமலம் கைகள் தாமரை மலரே; திரு இடமே மார்வம் மார்பு திருமகளுக்கு இருப்பிடம்; கொப்பூழ் நாபிக் கமலம்; அயனிடமே பிரமனுக்கு; ஒரு விடமும் அரனே மற்று இருக்கும் இடம் ருத்ரனுக்கு இடமாயிற்று
oru(vu) idam onṛu inṛi without leaving anything; en ul̤ inside me; kalandhānukku one who united; endhai perumāṛku lord of my clan; thiru laudable; udambu body/form; vān sudar in the colour of ādhithya (sun); kaṇ kai kamalam divine hands and divine eyes; sem reddish; thāmarai fresh like a lotus; mārvam divine chest; thiru idamĕ the abode of ṣrī mahālakshmi; koppūzh navel; ayan for brahmā; idamĕ abode; oruvu idam the other part; aranĕ is rudhra himself; ŏh! how amaśing!

TVM 2.5.3

2947 என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம் *
மின்னும்சுடர்மலைக்கு கண்பாதம்கைகமலம் *
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள *
தன்னுள்கலவாதது எப்பொருளும்தானிலையே.
2947 என்னுள் கலந்தவன் * செங்கனி வாய் செங்கமலம் *
மின்னும் சுடர் மலைக்கு * கண் பாதம் கை கமலம் **
மன்னும் முழு ஏழ் உலகும் * வயிற்றின் உள *
தன்னுள் கலவாதது * எப் பொருளும் தான் இலையே (3)
2947 ĕṉṉul̤ kalantavaṉ * cĕṅkaṉi vāy cĕṅkamalam *
miṉṉum cuṭar malaikku * kaṇ pātam kai kamalam **
maṉṉum muzhu ezh ulakum * vayiṟṟiṉ ul̤a *
taṉṉul̤ kalavātatu * ĕp pŏrul̤um tāṉ ilaiye (3)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The One who has mingled with me sparkles like a dazzling mountain. His mouth, eyes, feet, and hands are as beautiful as red lotuses. His stomach sustains all seven worlds, and there is hardly anything that doesn't converge in Him.

Explanatory Notes

(i) Not only Lakṣmī, Brahmā and Rudra, but whatever exists subsists in Him alone. Even so, it is now made to appear that the Lord cannot subsist except by mingling with the Āzhvār. who has, in this context, given Him yet another name (like Nārāyaṇa Vāsudēva) namely, ‘The one iṇ me mingled’.

(ii) The Lord is in full bloom and joy only after He mingled with the Āzhvār + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னுள் கலந்தவன் என்னுள் வந்து கலந்தவனாகி; மின்னும் சுடர் ஒளிமயமான; மலைக்கு மலை போன்ற இறைவனுக்கு; செங்கனி வாய் சிவந்து கனிந்த அதரம்; செங்கமலம் செந்தாமரை மலர் போன்றது; கண் பாதம் கண்களும் திருவடிகளும்; கை கமலம் கைகளும் செந்தாமரை மலரே; மன்னு முழு ஏழ் உலகும் நிலைபெற்ற ஸகல லோகங்களும்; வயிற்றின் உள வயிற்றில் அடங்கியுள்ளன; தன்னுள் கலவாதது தனக்குள்ளே கலவாதிருப்பது; எப் பொருளும் தான் யாதொரு பொருளுமே; இலையே இல்லை என்றவாறு
en ul̤ inside me; kalandhavan being united; minnum shining (due to that bonding); sudar having radiance; malaikku one who is like a mountain; sem kani vāy sem kamalam kaṇ pādham kai kamalam (as explained previously) all his exalted bodily features are shining radiantly; mannum firmly; muzhu full; ĕzh ulagum seven (all) worlds; vayiṝin being in his stomach; ul̤a sustaining; than ul̤ inside him; kalavādhadhu those which are not related; ep porul̤um thān any object; illai not present

TVM 2.5.4

2948 எப்பொருளும்தானாய் மரதகக்குன்றமொக்கும் *
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம் *
எப்பொழுதும்நாள்திங்கள் ஆண்டூழியூழிதொறும் *
அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே.
2948 எப் பொருளும் தான் ஆய் * மரதகக் குன்றம் ஒக்கும் *
அப்பொழுதைத் தாமரைப்பூக் * கண் பாதம் கை கமலம் **
எப்பொழுதும் நாள் திங்கள் * ஆண்டு ஊழி ஊழிதொறும் *
அப்பொழுதைக்கு அப்பொழுது * என் ஆரா அமுதமே (4)
2948 ĕp pŏrul̤um tāṉ āy * maratakak kuṉṟam ŏkkum *
appŏzhutait tāmaraippūk * kaṇ pātam kai kamalam **
ĕppŏzhutum nāl̤ tiṅkal̤ * āṇṭu ūzhi ūzhitŏṟum *
appŏzhutaikku appŏzhutu * ĕṉ ārā amutame (4)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord, who encompasses all things within Himself, shines like an emerald mountain. His eyes, feet, and hands are like red lotuses in fresh bloom. He is an ever-refreshing nectar to me, at all times, through days, months, years, and ages.

Explanatory Notes

In his preamble to this song, the illustrious Nampiḷḷai says: Seeing the Āzhvār comparing repeatedly the Lord’s eyes, lips, hands and feet to red lotus, some persons asked him why he went on repeating the same thing. The Āzhvār rejoined, “Well, I cannot help saying so, for every moment, down the days, months, years and a whole epoch, there is a freshness about Him, like + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எப்பொழுதும் எப்பொழுதும்; நாள் திங்கள் எல்லா நாட்களும் எல்லா மாதங்களும்; ஆண்டு எல்லா வருஷங்களும்; ஊழி ஊழி தொறும் ஊழி ஊழிகள் தோறும்; அப்பொழுதைக்கு அப்போதைக்கு; அப்பொழுது அப் பொழுது; என் ஆரா எனக்குத் தெவிட்டாத; அமுதமே அமுதமாய் இருக்கும் பெருமான்; எப் பொருளும் எல்லாப் பொருள்களும்; தானாய் தனக்குள் அடங்கப் பெற்றவனாய்; மரதகக் குன்றம் மரகத மலையை; ஒக்கும் ஒத்தவன் ஆனான்; அப் பொழுதை அப்போது அலர்ந்த; தாமரைப் பூ கண் தாமரைப் பூ போலே கண்களும்; அப் பொழுதை அப்போது அலர்ந்த; கமலம் கமலம் போல்; பாதம் கை திருவடிகளும் கைகளும் பொலிவு பெற்றன
eppozhudhum all moments; ennāl̤ all days; eththingal̤ all months; evvāṇdu all years; evvūzhi ūzhi thoṛum all yuga cycles; appozhudhaikku appozhudhu every such moment; en being united with me; ārā unquenchable; amudham nectar; epporul̤um all objects; thānāy feeling satisfied for being the āthmā of everything; maradhagak kunṛam okkum having greatness (in height), complexion and strength like an emerald mountain; appozhudhai freshly blossomed; thāmaraip pū like a lotus flower; kaṇ eyes; appozhudhaik kamala freshly blossomed lotus flower like; pādham divine feet; kai divine hands acquired freshness

TVM 2.5.5

2949 ஆராவமுதமாய் அல்லாவியுள்கலந்த *
காரார் கருமுகில்போல் என்னம்மான் கண்ணனுக்கு *
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம் *
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே.
2949 ஆரா அமுதமாய் * அல் ஆவியுள் கலந்த *
கார் ஆர் கருமுகில் போல் * என் அம்மான் கண்ணனுக்கு **
நேரா வாய் செம்பவளம் * கண் பாதம் கை கமலம் *
பேர் ஆரம் நீள் முடி நாண் * பின்னும் இழை பலவே (5)
2949 ārā amutamāy * al āviyul̤ kalanta *
kār ār karumukil pol * ĕṉ ammāṉ kaṇṇaṉukku **
nerā vāy cĕmpaval̤am * kaṇ pātam kai kamalam *
per āram nīl̤ muṭi nāṇ * piṉṉum izhai palave (5)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The cloud-hued Lord, who is the ever-refreshing nectar, has entered my worthless soul. Can the red fruits compare with the lips of Kaṇṇaṉ, my Father? Or can the planter of the lotus match His eyes, hands, and feet? He is adorned with many jewels, including a tall and majestic crown, a large necklace, and a waist band.

Explanatory Notes

The Āzhvār who was hitherto comparing the Lord’s lips to red, fruits and His eyes, hands and feet to the red lotus flower, has now a closer look at the Lord inside him and finds that the Lord is of matchless beauty and incomparable excellence and that the things hitherto compared with Him, stand nowhere. Then the Āzhvār beholds the vast array of jewels on the Lord’s person + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆரா அமுதம் ஆய் தெவிட்டாத அமுதமாய்; அல் ஒரு பொருளாக மதிக்கத் தகுதி இல்லாத; ஆவி உள் கலந்த என் நெஞ்சுக்குள் கலந்து; கார்ஆர் கார்காலத்தில் எழும்; கருமுகில் போல் காளமேகம் போன்றவனாயிருக்கும்; என் அம்மான் என் தலைவனான; கண்ணனுக்கு கண்ணனுக்கு; செம் பவளம் சிவந்த பவழங்கள்; வாய் நேரா அதரத்திற்கு ஒப்பாக மாட்டாது; கமலம் தாமரை மலர்கள்; கண் பாதம் கண் திருவடி; கை நேரா கைகளுக்கு ஒப்பாக மாட்டாது; பேர் ஆரம் பெரிய ஹாரங்கள்; நீள் முடி நாண் நீண்ட முடியும் அரைநாணும்; பின்னும் மற்றுமுள்ள; இழை பலவே ஆபரணங்களும் பல பலவாய் இருக்கின்றன
ārā amudhamāy being unsurpassed sweet person; al having nothing (useless); āvi ul̤ in my heart; kalandhu mingled/united; kār in rainy season; ār full; karu mugil pŏl like a dark cloud; en ammān one who is my lord; kaṇṇanukku for krishṇa; sem reddish; paval̤am coral; vāy lips; nĕrādhu incomparable; kamalam lotus flowers; kaṇ pādham kai eyes, feet and hands; nĕrā incomparable; pĕr huge; āram garland; nīl̤ tall; mudi crown; nāṇ waist string etc.; pinnum and other; izhai ornaments; pala countless

TVM 2.5.6

2950 பலபலவேயாபரணம் பேரும்பலபலவே *
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில் *
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம் *
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ!
2950 பலபலவே ஆபரணம் * பேரும் பலபலவே *
பலபலவே சோதி * வடிவு பண்பு எண்ணில் **
பலபல கண்டு உண்டு * கேட்டு உற்று மோந்து இன்பம் *
பலபலவே ஞானமும் * பாம்பு அணை மேலாற்கேயோ (6)
2950 palapalave āparaṇam * perum palapalave *
palapalave coti * vaṭivu paṇpu ĕṇṇil **
palapala kaṇṭu uṇṭu * keṭṭu uṟṟu montu iṉpam *
palapalave ñāṉamum * pāmpu aṇai melāṟkeyo (6)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord who reclines on the serpent bed has entered me and taken on new dimensions. If I were to pause and examine His union with me, He reveals an endless variety of jewels and exquisite forms. He revels within me, using the many sensual channels with the appropriate know-how.

Explanatory Notes

(i) The Āzhvār feels that the Lord, in union with him, is not satisfied with His assumption of a single form, a single set of jewels, a single method of enjoyment of the Āzhvār through the senses of seeing, smelling etc, or single type of knowledge but wants to enjoy the Āzhvār in myriad ways, employing different techniques, assuming different forms, displaying different + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாம்பு அணை ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட; மேலாற்கேயோ என்னோடு கலந்த பெருமானின்; பண்பு எண்ணில் பண்புகளை எண்ணிப் பார்க்கையில்; ஆபரணம் ஆபரணங்கள்; பலபலவே பலபலவாயிருக்கும்; சோதி வடிவு பலபல ஒளியுள்ள திருமேனி பலபல; பேரும் பலபலவே நாமங்களும் பலபலவே; கண்டு உண்டு கேட்டு கண்டு உண்டு கேட்டு; உற்று மோந்து உற்று மோந்து; இன்பம் பலபலவே அநுபவிக்கும் இன்பங்களும் பலபல; ஞானமும் பலபலவே ஞானமும் பலபலவாயிருக்கும்
pāmbaṇai mĕlāṛku for the emperumān who united with me, just like having thiruvananthāzhwān (ādhiṣĕshan) as his bed (thus being united with him); paṇbu eṇṇil when analysing his nature; ābharaṇam ornaments; pala pala having many ornaments like crown etc and having many varieties of each of such ornaments; pĕrum names; pala pala many due to his being present as different entities, having many different objects in each category; sŏdhi radiantly shining; vadivu divine spiritual forms; pala pala many forms such as para (in ṣrīvaikuṇtam), vyūha (kshīrābdhi #milk ocean) etc and multiple forms in each such category; kaṇdu uṇdu kĕttu uṝu mŏndhu inbam all pleasures acquired through the different senses such as eyes, mouth, ears, skin, nose; pala pala many due to the presence of different entities and different objects in each category; gyānamum knowledge acquired through such senses; pala pala also many (like previously explained)

TVM 2.5.7

2951 பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும் *
காம்பணைதோள்பின்னைக்கா ஏறுடனேழ்செற்றதுவும் *
தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும் *
பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம்போரேறே.
2951 பாம்பு அணைமேல் பாற்கடலுள் * பள்ளி அமர்ந்ததுவும் *
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் * ஏறு உடன் ஏழ் செற்றதுவும் **
தேம் பணைய சோலை * மராமரம் ஏழ் எய்ததுவும் *
பூம் பிணைய தண் துழாய்ப் * பொன் முடி அம் போர் ஏறே (7)
2951 pāmpu aṇaimel pāṟkaṭalul̤ * pal̤l̤i amarntatuvum *
kāmpu aṇai tol̤ piṉṉaikku āy * eṟu uṭaṉ ezh cĕṟṟatuvum **
tem paṇaiya colai * marāmaram ezh ĕytatuvum *
pūm piṇaiya taṇ tuzhāyp * pŏṉ muṭi am por eṟe (7)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

My Lord, trim and lovely like a martial bull, wears a golden crown and the tulacī garland. Cool and well-put-together, He reclines on the serpent bed in the milk-ocean. For the sake of Piṉṉai with fine shoulders, He tamed the seven bulls all at once and pierced the seven trees.

Explanatory Notes

(i) In terms of the new technique adopted by the Lord, as set out in the previcus song, the Lord exhibited a few of the wondrous deeds performed by Him long back and the Āzhvār records them here, as envisioned by him.

(ii) According to one tradition, Nappiṇṇai, the charming shepherdess, believed to be an incarnation of Goddess Nīlā Devī, was a niece of Yaśodhā. Her + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாற்கடலுள் பாற் கடலில்; பாம்பு அணை மேல் பாம்பு அணை மேல்; பள்ளி அமர்ந்ததுவும் கண்வளர்தல் பொருந்தினதும்; காம்பு அணைதோள் மூங்கில் போன்ற தோள்களையுடைய; பின்னைக்கு ஆய் நப்பின்னைக்காக; ஏறு உடன் ஏழ் ஏழு காளைகளை ஒரே சமயத்தில்; செற்றதுவும் கொன்றதுவும்; தேம் பணைய தேனையும் கிளைகளையுமுடைய; சோலை சோலையாகத் தழைத்த; மராமரம் ஏழ் ஏழு மராமரங்களையும்; எய்ததுவும் ஓர் அம்பால் துளை செய்ததும்; பூம் பிணைய அழகிய தொடுக்கப்பட்ட; தண் துழாய் குளிர்ந்த துளசி மாலை அணிந்த; பொன் முடி பொன்மயமான திருமுடியையுடைய; அம் போரேறே காளை போன்றவனே!
pāṛkadalul̤ īn the milk ocean; pāmbu aṇai mĕl on the serpent bed; pal̤l̤i resting; amarndhaduvum firmly placed; kāmbu aṇai l̤ike bamboo; thŏl̤ having shoulders; pinnaikkāy for nappinnaip pirātti; ĕṛu ĕzhu seven bulls; udan at the same time; seṝadhuvum killed; thĕn honey; paṇaiya having branches; sŏlai (due to that) grown like a garden; marāmaram pipal (peepal) tree; ĕzh seven; eydhadhuvum shot; beautiful; piṇaiya woven; thaṇ cool; thuzhāy decorated by thul̤asi; pon very radiant; mudi having crown; am delight to watch; pŏr prideful, being focused on destroying the enemies; ĕṛu l̤ike a bull

TVM 2.5.8

2952 பொன்முடியம்போரேற்றை எம்மானை, நால்தடந்தோள் *
தன்முடிவொன்றில்லாத தண்துழாய்மாலையனை *
என்முடிவுகாணாதே என்னுள்கலந்தானை *
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்? சொல்லீரே.
2952 பொன் முடி அம் போர் * ஏற்றை எம்மானை நால் தடம் தோள் *
தன் முடிவு ஒன்று இல்லாத * தண் துழாய் மாலையனை **
என் முடிவு காணாதே * என்னுள் கலந்தானை *
சொல்முடிவு காணேன் நான் * சொல்லுவது என்? சொல்லீரே (8)
2952 pŏṉ muṭi am por * eṟṟai ĕmmāṉai nāl taṭam tol̤ *
taṉ muṭivu ŏṉṟu illāta * taṇ tuzhāy mālaiyaṉai **
ĕṉ muṭivu kāṇāte * ĕṉṉul̤ kalantāṉai *
cŏlmuṭivu kāṇeṉ nāṉ * cŏlluvatu ĕṉ? cŏllīre (8)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord is majestic like a warring bull, wearing a golden crown and having strong four shoulders. He has limitless glory and wears a cool tulacī garland. He joined with me despite my humble state. I struggle to sing His unending glory. Tell me, you talkative worldlings, how to properly praise my Lord!

Explanatory Notes

(i) The Āzhvār says that it is beyond his capacity to describe the condescending love of One, so great, mingling with him, so low.

(ii) The Lord’s crown and tulacī garland proclaim His sovereignty. If His glory is limitless, there is also no limit to the Āzhvār’s abjectness and yet He has chosen to mingle with the Āzhvār. By His deeds and traits, the Lord enthralled + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் முடி பொன் மயமான திருமுடியை உடையவனாய்; அம் போர் ஏற்றை போர்க்காளையைப் போன்றவனாய்; எம்மானை எனக்கு நாதனாய்; நால் தடம் தோள் நான்கு பெரிய தோள்களை உடையவனாய்; தன் முடி ஒன்று தன் பெருமையின் எல்லைக்கு முடிவு; இல்லாத ஒன்றும் இல்லாதவனாய்; தண் துழாய் குளிர்ந்த துளசி; மாலையனை மாலை அணிந்தவனாய்; என் முடிவு காணாதே என் தாழ்ச்சியின் முடிவு பாராமல்; என்னுள் கலந்தானை என்னுள் கலந்த பெருமானை; சொல் முடிவு பாசுரமிட்டு சொல்லும் வகை; காணேன் நான் அறியாத நான்; என்? சொல்லுவது என்னவென்று சொல்வது?; சொல்லீரே சொல்லுங்கள் என்கிறார்
pon radiant; mudi having a crown; am pŏr ĕṝai being very prideful; emmānai the master who accepted my service (by showing such pride of full independence); nāl four types of; thadam huge; thŏl̤ having divine shoulders; than for his greatness; mudivu onṛillādha having no end; thaṇ cool; thuzhāy mālaiyanai one who is wearing a divine thul̤asi garland; en mudivu kāṇādhĕ (like there is no end for his greatness) without seeing my lowliness; en ul̤ in my heart; kalandhānai one who mingled/united; nān me; sol to explain through words; mudivu method; kāṇĕn not seeing; solluvadhu explaining this; en how?; solleer (if possible) please do that (he is saying this to worldly people).

TVM 2.5.9

2953 சொல்லீரென்னம்மானை என்னாவியாவிதனை *
எல்லையில்சீர் என்கருமாணிக்கச்சுடரை *
நல்லவமுதம் பெறற்கரிய வீடுமாய் *
அல்லிமலர்விரையொத்து ஆணல்லன்பெண்ணல்லனே.
2953 சொல்லீர் என் அம்மானை * என் ஆவி ஆவிதனை *
எல்லை இல் சீர் * என் கருமாணிக்கச் சுடரை **
நல்ல அமுதம் * பெறற்கு அரிய வீடும் ஆய் *
அல்லி மலர் விரை ஒத்து * ஆண் அல்லன் பெண் அல்லனே (9)
2953 cŏllīr ĕṉ ammāṉai * ĕṉ āvi āvitaṉai *
ĕllai il cīr * ĕṉ karumāṇikkac cuṭarai **
nalla amutam * pĕṟaṟku ariya vīṭum āy *
alli malar virai ŏttu * āṇ allaṉ pĕṇ allaṉe (9)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

It is better to sing the praise of my Father, the Soul of my soul, the radiant sapphire of endless auspicious qualities, the delightful nectar. He is the great Ordainer of Mokṣa, which is difficult to attain, and is as sweet as the fragrance of the lotus flower. He transcends both male and female as we know them.

Explanatory Notes

(i) Although the Āzhvār found himself speechless, yet he could not resist the urge to sing the Lord’s praise, in the company of the worldlings. And, therefore, he exhorts them to desist from the worldly affairs, at least for a while, and sing the Lord’s glory along with him.

(ii) Being a ‘Puruṣa’ (Male), the Lord is certainly not a female and being a ‘Puruṣottama’ + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் அம்மானை எனக்கு ஸ்வாமியை; என் ஆவி என் ஆத்மாவுக்கும்; ஆவிதனை ஆத்மாவாய் இருப்பவனை; எல்லையில் சீர் எல்லையில்லாத குணங்களை உடையவனை; என் கரு மாணிக்க என் நீலரத்தினம் போன்ற; சுடரை ஒளி உருவை எல்லோரும் சேர்ந்து; சொல்லீர் சொல்லலாமாகில் சொல்லுங்கள்; நல்ல அமுதம் சிறந்த அமுதம் போன்று இனியனாய்; பெறற்கு அரிய எளிதாகப் பெறுவதற்கு முடியாத; வீடுமாய் மோக்ஷ நிலத்திற்குத் தலைவனாய்; அல்லி மலர் தாமரை மலரின்; விரை ஒத்து மணத்தை ஒத்தவனாய்; ஆண் அல்லன் ஆணாகவும் அல்லாமல்; பெண் அலனே பெண்ணாகவும் அல்லாமல் இருக்கிறான்
en for me; ammānai being the lord; en āvi for my soul; āvi thanai being the soul; ellai il boundless; sīr having qualities such as saukumāryam (beauty) etc; en karumāṇikkach chudarai one who allowed me to experience his blue emerald like form; solleer speak (if it is possible to do so for all of you together); nalla being distinct (from worldly nectar); amudham eternally sweet nectar; peṛaṛku to attain; ariya difficult; vīdumāy the controller of the eternal land (of paramapadham- spiritual realm); alli malar in water lily flower; virai oththu most enjoyable like the fragrance; peṇ allan like he is different from women (due to his being a man); āṇ allan he is different from all men other than himself (due to his being purushŏththama- supreme man)

TVM 2.5.10

2954 ஆணல்லன்பெண்ணல்லன் அல்லாவலியுமல்லன் *
காணலுமாகான் உளனல்லனில்லையல்லன் *
பேணுங்காற்பேணும் உருவாகும்அல்லனுமாம் *
கோணைபெரிதுடைத்து எம்பெம்மானைக்கூறுதலே.
2954 ஆண் அல்லன் பெண் அல்லன் * அல்லா அலியும் அல்லன் *
காணலும் ஆகான் * உளன் அல்லன் இல்லை அல்லன் **
பேணுங்கால் பேணும் * உரு ஆகும் அல்லனும் ஆம் *
கோணை பெரிது உடைத்து * எம் பெம்மானைக் கூறுதலே (10)
2954 āṇ allaṉ pĕṇ allaṉ * allā aliyum allaṉ *
kāṇalum ākāṉ * ul̤aṉ allaṉ illai allaṉ **
peṇuṅkāl peṇum * uru ākum allaṉum ām *
koṇai pĕritu uṭaittu * ĕm pĕmmāṉaik kūṟutale (10)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

It is truly challenging to accurately sing my Lord's glory. He is neither male nor female nor neutral. He neither exists nor does not exist. The naked eye cannot see Him, yet He takes on the form the devout desire, while remaining inaccessible to others.

Explanatory Notes

In Ṛg Veda, ‘Āraṇyaka’, the Lord is said, to be quite apart, that is, different from the rest. Therefore it is, the Āzhvār says that He is neither male nor female, nor the ‘in-between’. A Tamil Pundit, who was listening to Śrī Parāśara Bhaṭṭar’s discourse on this song, observed that it smacked of the doctrine of nothingness (Śūnya), as the Lord could not be brought under + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆணல்லன் ஆணுமல்லன்; பெண்ணல்லன் பெண்ணும் அல்லன்; அல்லா அலியும் அல்லன் இருபாலும் அற்ற அலியுமல்லன்; காணலும் ஆகான் கண்களால் காண்பதற்கு இயலாதவன்; உளன் அல்லன் உள்ளவன் அல்லன்; இல்லை அல்லன் இல்லாதவனுமல்லன்; பேணுங்கால் அடியார் விரும்புகின்ற காலத்தில்; பேணும் உரு ஆகும் விரும்பின வடிவை உடையவனாவான்; அல்லனும் ஆம் அப்படியல்லாதவனாயுமிருப்பான் ஆதலால்; எம் பெம்மானை எம் பெருமானை; கூறுதலே இப்பிரகாரம் என்று கூறுமிடத்து; கோணை பெரிது மிக்க முறுக்காக; உடைத்து உள்ளது என்றபடி
āṇ male; allan not being; peṇ female; allan not being; allā useless; aliyum gender-less; allan not being; kāṇalum to be seen (using the pramāṇams that show them); āgān unable; ul̤an allan does not exist (for those who are unfavourable); illai allan exists- he is not void (for those who are favourable); pĕṇum when being devoted (as devotees); kāl at times; pĕṇum desired (by those); uru āgum assuming a form; allanum āy (for those who don-t have such desire) he will not manifest his form; em pemmānai my master; kūṛudhal while explaining (me who has seen this nature of him as shown by him); peridhu very; kŏṇai udaiththu difficult

TVM 2.5.11

2955 கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை *
கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன் *
கூறினவந்தாதி ஓராயிரத்துள்இப்பத்தும் *
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. (2)
2955 ## கூறுதல் ஒன்று ஆராக் * குடக் கூத்த அம்மானை *
கூறுதலே மேவிக் * குருகூர்ச் சடகோபன் **
கூறின அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
கூறுதல் வல்லார் உளரேல் * கூடுவர் வைகுந்தமே (11)
2955 ## kūṟutal ŏṉṟu ārāk * kuṭak kūtta ammāṉai *
kūṟutale mevik * kurukūrc caṭakopaṉ **
kūṟiṉa antāti * or āyirattul̤ ip pattum *
kūṟutal vallār ul̤arel * kūṭuvar vaikuntame (11)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Those who can recite these ten stanzas from the thousand sung by Kurukūr Caṭakōpaṉ, keen to recount the indescribable traits of Lord Kṛṣṇa, the great pot-dancer, will attain SriVaikuntam.

Explanatory Notes

(i) Those, conversant with this decad, will attain SriVaikuntam without undergoing any of the sufferings, passed through by the Āzhvār as set out in the last decad. It is like the sons enjoying, with ease, the property acquired by the father, by dint of hard labour and sufferings.

(ii) It is not the Lord’s transcendental glory that baffles description but His easy + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒன்று வேதங்களாலும் ஒரு குணத்தைக் கூட; கூறுதல் ஆரா சொல்லி முடிக்க முடியாத; குடக் கூத்த குடக் கூத்தாடின; அம்மானை கண்ணபிரானைக் குறித்து; கூறுதலே மேவி கூறுவதற்கு ஆசைப்பட்டு; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; கூறின ஆசைப்பட்டபடியே கூறி முடித்த; அந்தாதி அந்தாதியான; ஓர் ஆயிரத்துள் ஓர் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்த பத்துப் பாசுரங்களையும்; கூறுதல் வல்லார் ஓத வல்லவர்கள்; உளரேல் இருப்பார்களேயாகில்; கூடுவர் வைகுந்தமே அவர்கள் பரமபதம் அடைவார்கள்
onṛu one quality; kūṛudhal if spoken; ārā cannot be fully spoken; kudak kūththu [emperumān who is having] auspicious qualities such as ṣeel̤a (simplicity) which is manifested by him dancing like a cow-herd boy with pots; ammānai master; kūṛudhal to explain (as is); mĕvi set out; kurugūrch chatakŏpan āzhvār (who became knowledgeable and devoted to emperumān by the grace of emperumān); kūṛina mercifully explained; andhādhi anthādhi style (ḫirst word/sentence of a pāsuram relates to the last word/sentence of previous pāsuram) in which the structure of the pāsurams cannot be corrupted; ŏr unique/matchless; āyiraththul̤ among the thousand pāsurams; ip paththum this decad; kūṛudhal to recite/speak; vallār able; ul̤arĕl if present; vaikundham paramapadham (spiritual realm); kūduvar reach