Your browser does not support the audio element.
audio
3882 முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! * என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என்கள்வா! *
தனியேனாருயிரே! என்தலைமிசையாய்வந்திட்டு *
இனிநான்போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யே லென்னையே. (2)
3883 மாயம்செய்யேலென்னை உன்திருமார்வத்துமாலைநங்கை *
வாசம்செய்பூங்குழலாள் திருவாணைநின்னாணைகண்டாய் *
நேசம்செய்துஉன்னோடென்னைஉயிர்வேறின்றிஒன்றாகவே *
கூசஞ்செய்யாதுகொண்டாய் என்னைக்கூவிச்கொள்ளாய் வந்தந்தோ!
3884 கூவிக்கொள்ளாய்வந்தந்தோ! என்பொல்லாக் கருமாணிக்கமே! *
ஆவிக்கோர்பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன் யான் *
மேவித்தொழும்பிரமன்சிவன் இந்திரனாதிக்கெல்லாம் *
நாவிக்கமலமுதற்கிழங்கே! உம்பரந்ததுவே.
3885 உம்பரந்தண்பாழேயோ! அதனுள்மிசைநீயேயோ! *
அம்பரநற்சோதி! அதனுள்பிரமன்அரன்நீ *
உம்பரும்யாதவரும்படைத்த முனிவன்அவன்நீ *
எம்பரம்சாதிக்கலுற்று என்னைப்போரவிட்டிட்டாயே.
3886 போரவிட்டிட்டென்னை நீபுறம்போக்கலுற்றால் * பின்னையான்
ஆரைக்கொண்டெத்தையந்தோ! எனதென்பதென்? யானென்பதென்! *
தீரஇரும்புண்டநீரதுபோல என்னாருயிரை
ஆரப்பருக * எனக்கு ஆராவமுதானாயே.
3887 எனக்காராவமுதாய் எனதாவியை இன்னுயிரை *
மனக்காராமைமன்னியுண்டிட்டாய்இனியுண்டொழியாய் *
புனக்காயாநிறத்த புண்டரீகக்கண்செங்கனிவாய் *
உனக்கேற்கும்கோலமலர்ப்பாவைக்கன்பா! என்னன்பேயோ!
3888 கோலமலர்ப்பாவைக்கன்பாகிய என்னன்பேயோ! *
நீலவரைஇரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்ப *
கோலவராகமொன்றாய் நிலங்கோட்டிடைக்கொண்ட எந்தாய்! *
நீலக்கடல்கடைந்தாய்! உன்னைப்பெற்றுஇனிப் போக்குவனோ? (2)
3889 பெற்றினிப்போக்குவனோ? உன்னைஎன்தனிப்பேருயிரை *
உற்றவிருவினையாய் உயிராய்ப்பயனாயவையாய் *
முற்றவிம்மூவுலகும் பெருந்தூறாய்த்தூற்றில்புக்கு *
முற்றக்கரந்தொளித்தாய் என்முதல்தனிவித்தேயோ!
3890 முதல்தனிவித்தேயோ! முழுமூவுலகாதிக்கெல்லாம் *
முதல்தனியுன்னையுன்னை எனைநாள்வந்துகூடுவன்நான்? *
முதல்தனியங்குமிங்கும் முழுமுற்றுறுவாழ்பாழாய் *
முதல்தனிசூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!
3891 சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ! *
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ! *
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ! *
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே. (2)
3892 அவாவறச்சூழ்அரியை அயனையரனையலற்றி *
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்சொன்ன *
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும் * முடிந்த
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார்உயர்ந்தே. (2)