As the Āḻvār Ascended to Paramapadam, the People of the World Worshipped Him.
ஆழ்வார் பரமபதம் செல்லுங்கால் உலகோர் தொழுதனர்
3872 நாரணன்தமரைக்கண்டுகந்து நல்நீர்முகில் *
பூரணபொற்குடம் பூரித்ததுஉயர்விண்ணில் *
நீரணிகடல்கள் நின்றார்த்தன * நெடுவரைத்
தோரணம்நிரைத்து எங்கும்தொழுதனருலகே.