Let Us Enter Tiruvaṉantapuram and Perform Service.
தொண்டு செய்யாத திருவனந்தபுரம் புகுவோம்
3794 கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன * நாளும்
கொடுவினைசெய்யும் கூற்றின்தமர்களும்குறுககில்லார் *
விடமுடையரவில் பள்ளிவிரும்பினான்சுரும்பலற்றும் *
தடமுடைவயல் அனந்தபுரநகர்ப்புகுதும்இன்றே. (2)