Praise Mādhava of Tiruvaṉantapuram: Glory Can Be Attained.
திருவனந்தபுரத்து மாதவனை ஏத்துக: புகழடையலாம்
3803 மாய்ந்தறும்வினைகள்தாமே மாதவா! என்ன * நாளும்
ஏய்ந்தபொன்மதிள் அனந்தபுரநகரெந்தைக்கென்று *
சாந்தொடுவிளக்கம்தூபம் தாமரைமலர்கள்நல்ல *
ஆய்ந்துகொண்டேத்தவல்லார் அந்தமில்புகழினாரே.