Chapter 1
Desiring to attain paramapadam, Āzhvār surrenders to Thiru mOgur perumān (திருமோகூர்)
பரமபதம் அடையக் கருதிய ஆழ்வார் திருமோகூர் பெருமானைச் சரணடைதல் (திருமோகூர்)
That he was nearing the end of his life was self-evident to Āzhvār, so he decided to prepare for his journey to Vaikuntam (ThiruNādu). Before he initiated his journey, he clung onto Sri KālamEga Perumāl at Thiru mOgur divyadesam as his chaperone.
தம் வாழ்நாளின் முடிவு நெருங்கிவிட்டது என்று தாமே முடிவு செய்துகொண்ட ஆழ்வார், திருநாட்டுப் பயணத்திற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, முந்துற முன்னம் திருமோகூர்க் காளமேகப் பெருமாளை வழித்துணையாகப் பற்றுகிறார்.
பத்தாம் பத்து -முதல் திருவாய் மொழி -தாள தாமரை -பிரவேசம் –
முதல் + Read more
Verses: 3783 to 3793
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will have no trouble in their lives
- TVM 10.1.1
3783 ## தாள தாமரைத் * தடம் அணி வயல் திருமோகூர் *
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று * அசுரரைத் தகர்க்கும் **
தோளும் நான்கு உடைச் * சுரி குழல் கமலக் கண் கனி வாய் *
காளமேகத்தை அன்றி * மற்றொன்று இலம் கதியே (1) - TVM 10.1.2
3784 இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் * ஈன் தண் துழாயின் *
அலங்கல் அம் கண்ணி * ஆயிரம் பேர் உடை அம்மான் **
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் * திருமோகூர் *
நலம் கழல் அவன் அடி நிழல் * தடம் அன்றி யாமே (2) - TVM 10.1.3
3785 அன்றி யாம் ஒரு புகலிடம் * இலம் என்று என்று அலற்றி *
நின்று நான்முகன் அரனொடு * தேவர்கள் நாட **
வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் * திருமோகூர் *
நன்று நாம் இனி நணுகுதும் * நமது இடர் கெடவே (3) - TVM 10.1.4
3786 இடர் கெட எம்மைப் போந்து அளியாய் * என்று என்று ஏத்தி *
சுடர் கொள் சோதியைத் * தேவரும் முனிவரும் தொடர **
படர் கொள் பாம்பு அணைப் * பள்ளி கொள்வான் திருமோகூர் *
இடர் கெட அடி பரவுதும் * தொண்டீர்! வம்மினே (4) - TVM 10.1.5
3787 தொண்டீர் வம்மின் * நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் *
அண்டம் மூவுலகு அளந்தவன் * அணி திருமோகூர் **
எண் திசையும் ஈன் கரும்பொடு * பெரும் செந்நெல் விளைய *
கொண்ட கோயிலை வலஞ்செய்து * இங்கு ஆடுதும் கூத்தே (5) - TVM 10.1.6
3788 கூத்தன் கோவலன் * குதற்று வல் அசுரர்கள் கூற்றம் *
ஏத்தும் நங்கட்கும் * அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் **
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் * திருமோகூர்
ஆத்தன் * தாமரை அடி அன்றி * மற்று இலம் அரணே (6) - TVM 10.1.7
3789 மற்று இலம் அரண் * வான் பெரும் பாழ் தனி முதலா *
சுற்றும் நீர் படைத்து * அதன் வழித் தொல் முனி முதலா **
முற்றும் தேவரோடு * உலகுசெய்வான் திருமோகூர் *
சுற்றி நாம் வலஞ் செய்ய * நம் துயர் கெடும் கடிதே (7) - TVM 10.1.8
3790 துயர் கெடும் கடிது அடைந்து வந்து * அடியவர் தொழுமின் *
உயர் கொள் சோலை * ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் **
பெயர்கள் ஆயிரம் உடைய * வல் அரக்கர் புக்கு அழுந்த *
தயரதன் பெற்ற * மரதக மணித் தடத்தினையே (8) - TVM 10.1.9
3791 மணித் தடத்து அடி மலர்க் கண்கள் * பவளச் செவ்வாய் *
அணிக் கொள் நால் தடம் தோள் * தெய்வம் அசுரரை என்றும் **
துணிக்கும் வல் அரட்டன் * உறை பொழில் திருமோகூர் *
நணித்து நம்முடை நல் அரண் * நாம் அடைந்தனமே (9) - TVM 10.1.10
3792 நாம் அடைந்த நல் அரண் * நமக்கு என்று நல் அமரர் *
தீமை செய்யும் வல் அசுரரை * அஞ்சிச் சென்று அடைந்தால் **
காம ரூபம் கொண்டு * எழுந்து அளிப்பான் திருமோகூர் *
நாமமே நவின்று எண்ணுமின் * ஏத்துமின் நமர்காள் (10) - TVM 10.1.11
3793 ## ஏத்துமின் நமர்காள் * என்று தான் குடம் ஆடு
கூத்தனை * குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் **
வாய்த்த ஆயிரத்துள் இவை * வண் திருமோகூர்க்கு *
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு * இடர் கெடுமே (11)