The Holy Feet of the Lord of Tirumōkūr are Our Protection.
திருமோகூரானின் திருவடிகளே காவல்
3788 கூத்தன்கோவலன் குதற்றுவல்லசுரர்கள்கூற்றம் *
ஏத்தும்நங்கடகும் அமரர்க்கும்முனிவர்க்குமின்பன் *
வாய்த்ததண்பணைவளவயல்சூழ் திருமோகூர்
ஆத்தன் * தாமரையடியன்றிமற்றிலம்அரணே. (2)