This World is Not Enslaved to Anyone but the Great Lord.
நெடியேனுக்கன்றி இவ்வுலகம் யாருக்கும் அடிமை யாகாது
2582 மாமுதலடிப்போதொன்றுகவிழ்த்தலர்த்தி *
மண்முழுதுமகப்படுத்து * ஒண்சுடரடிப்போது
ஒன்றுவிண்செலீஇ * நான்முகப்புத்தேள்
நாடுவியந்துவப்ப * வானவர்முறைமுறை
வழிபடநெறீஇ * தாமரைக்காடு
மலர்க்கண்ணொடுகனிவாயுடையது மாய் *
இருநாயிறுஆயிரம்மலர்ந்தன்ன *
கற்பகக்காவுபற்பலவன்ன *
முடிதோளாயிரம்தழைத்த *
நெடியோய்க் கல்லது அடியதோவுலகே?