The Primal Cause is the First Great God.
ஆதிமூலமே முதற் பெருங்கடவுள்
2583 ஓஓ! உலகினதியல்வே! * ஈன்றோளிருக்க
மணைநீராட்டி * படைத்திடந்துண்டுமிழ்ந்
தளந்து * தேர்ந்துலகளிக்கும் முதற்பெருங்
கடவுள்நிற்ப * புடைப்பலதானறி
தெய்வம்பேணுதல் * தனாது
புல்லறிவாண்மைபொருந்தக்காட்டி *
கொல்வனமுதலா அல்லனமுயலும் *
இனையசெய்கைஇன்புதுன்பளி *
தொன்மாமாயப்பிறவியுள்நீங்கா *
பன்மாமாயத்தழுந்துமாநளிர்ந்தே.