I Will Praise and Worship the Holy Feet of the Wondrous Lord Alone.
மாயன் திருவடிகளையே வாழ்த்தித் தொழுவேன்
2581 ஊழிதோறூழியோவாது * வாழிய
வென்று யாம்தொழ இசையுங்கொல்? *
யாவகையுலகமும் யாவருமில்லா *
மேல்வரும் பெரும்பாழ்க்காலத்து * இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து * ஒருதா
னாகித்தெய்வநான்முகக்கொழுமுளை
யீன்று * முக்கணீசனொடுதேவுபலநுதலி *
மூவுலகம்விளைத்தஉந்தி *
மாயக்கடவுள்மாமுதலடியே.