Through Every Eon, I Must Be a Servant to the Supreme Lord Who Churned the Milky Ocean.
பாற்கடல் கடைந்த பரமனுக்கே ஊழிதோறும் நான் அடிமை ஆக வேண்டும்
2580 குறிப்பில்கொண்டுநெறிப்பட * உலகம்
மூன்று உடன் வணங்குதோன்று புகழ் * ஆணை
மெய்பெறநடாய தெய்வம்மூவரில்
முதல்வனாகி * சுடர்விளங்ககலத்து *
வரைபுரைதிரை பொருபெருவரைவெருவர *
உருமுரலொலிமலி நளிர்கடற்படவர
வரசுடல் தடவரை சுழற்றிய * தனிமாத்
தெய்வத்தடியவர்க்கு இனிநாமாளாகவே
இசையுங்கொல்? * ஊழிதோறூழியோவாதே.