TS 2

Love for the One Who Created and Swallowed the Worlds is Supreme.

படைத்து உண்டவன்பால் கொள்ளும் அன்பே சிறந்தது

2579 உலகுபடைத் துண்டவெந்தை * அறைகழல்

சுடர்ப்பூந்தாமரைசூடுதற்கு * அவாவு

ஆருயிருருகியுக்க * நேரிய

காதலன்பிலின்பீன்தேறல் * அமுத

வெள்ளத்தானாம் சிறப்புவிட்டு * ஒருபொருட்கு

அசைவோரசைக * திருவொடுமருவிய

இயற்கை * மாயாப்பெருவிறலுலகம்

மூன்றினொடுநல்வீடுபெறினும் *

கொள்வதெண்ணுமோ தெள்ளியோர்குறிப்பே?

Text size