"O You with Reddish Holy Feet, Who Measured the Three Worlds, While in Yogic Slumber on the Serpent Couch!"
அரவணையில் அறிதுயில் அமர்ந்து,மூவுலகையும் அளந்த சேவடியோய்!
2578 செக்கர்மாமுகிலுடுத்துமிக்கசெஞ்சுடர்ப்
பரிதிசூடி * அஞ்சுடர்மதியம்பூண்டு *
பலசுடர்புனைந்தபவளச்செவ்வாய் *
திகழ்பசுஞ்சோதிமரகதக்குன்றம் *
கடலோன்கைமிசைக்கண்வளர்வதுபோல் *
பீதகவாடைமுடிபூண்முதலா *
மேதகுபல்கலனணிந்து * சோதி
வாயவும்கண்ணவும்சிவப்ப * மீதிட்டுப்
பச்சைமேனிமிகப்பகைப்ப *
நச்சுவினைக்கவர்தலையரவினமளியேறி
எறிகடல்நடுவுளறிதுயிலமர்ந்து *
சிவனயனிந்திரனிவர்முதலனைத்தோர் *
தெய்வக்குழாங்கள்கைதொழக்கிடந்த *
தாமரையுந்தித்தனிப்பெருநாயக! *
மூவுலகளந்தசேவடியோயே!