O Friend! I will embrace Kaṇṇaṉ and my heart shall melt.
தோழீ! கண்ணனைத் தழுவி மனம் உருகுவேன்
2079 தென்னிலங்கையரண்சிதறிஅவுணன்மாளச்
சென்றுலகமூன்றினையும்திரிந்தோர்தேரால் *
மன்னிலங்குபாரதத்தைமாளவூர்ந்த
வரையுருவின்மாகளிற்றைத்தோழீ! * என்தன்
பொன்னிலங்குமுலைக்குவட்டில்பூட்டிக்கொண்டு
போகாமைவல்லேனாய்ப்புலவியெய்தி *
என்னிலங்கமெல்லாம்வந்துஇன்பமெய்த
எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே.