O Stork! Tell my love to Kaṇṇaṉ.
நாராய்! என் காதலைக் கண்ணனுக்குக் கூறு
2078 செங்காலமடநாராய்! இன்றேசென்று
திருக்கண்ணபுரம்புக்குஎன்செங்கண்மாலுக்கு *
எங்காதல்என்துணைவர்க்குரைத்தியாகில்
இதுவொப்பதுஎமக்கின்பமில்லை * நாளும்
பைங்கானமீதெல்லாம்உனதேயாகப்
பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன் * தந்தால்
இங்கேவந்தினிதிருந்துஉன்பெடையும்நீயும்
இருநிலத்தில்இனிதின்பமெய்தலாமே. (2)