82 பாட்டு –அவதாரிகை –
இதுக்கு முன்பு பரோபதேசம் பண்ணினாராய் -மேல்- ஈஸ்வரனைக் குறித்து – தேவரீர் திருவடிகளிலே ப்ரேம உக்தர் நித்ய ஸூகிகள் -என்கிறார் இதுக்கு அடி –
பிறருக்கு சாதகமாக தான் உபதேசித்த பக்தி -தமக்கு ஸ்வயம் பிரயோஜனம்-யாகையாலே -தமக்கு ரசித்த படியைப் பேசுகிறார் – இப்பரபக்தி தான் -சாதகனுக்கு உபாயத்தின் மேல் எல்லையாய் பிரபன்னனுக்கு ப்ராப்யத்திலே முதல்