TCV 83

பகவானிடம் அன்பு கொள்வதற்கு ஈடேயில்லை

834 மட்டுலாவுதண்டுழா யலங்கலாய்! புலன்கழல் *
விட்டுவிள்விலாதபோகம் விண்ணில்நண்ணியேறினும் *
எட்டினோடிரண்டெனும் கயிற்றினால்மனந்தனைக்
கட்டி * வீடிலாதுவைத்த காதலின்பமாகுமே.
834 maṭṭu ulāvu taṇ tuzhāy * -alaṅkalāy pulaṉ kazhal *
viṭṭu vīzhvu ilāta pokam * viṇṇil naṇṇi eṟiṉum **
ĕṭṭiṉoṭu iraṇṭu ĕṉum * kayiṟṟiṉāl maṉantaṉaik
kaṭṭi * vīṭu ilātu vaitta kātal * iṉpam ākume (83)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 8-14, 9-22, SR-UK-18-3

Simple Translation

834. O you who wear cool thulasi garlands that drip pollen, if someone controls his mind and worships you with the eight letter mantra, “Om Namo Nārāyanāya, ” the joy he receives is higher than the joy of attaining Mokshā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட்டு உலாவு தேன் நிறைந்த; தண் துழாய் குளிர்ந்த திருத்துழாய்; அலங்கலாய்! மாலை அணிந்தவனே!; புலன் காணத்தகுந்த; கழல் விட்டு உன் திருவடிகளை கைவிட்டு; விண்ணில் ஏறினும் பரமபதம் சென்று அடைந்து; வீழ்வு இலாத அழிவில்லாத; போகம் நண்ணி ஒரு போகத்தை அடையப்பெற்றாலும்; எட்டினோடு இரண்டு எனும் பக்தி என்கிற; கயிற்றினால் மனம் தனை பாசக் கயிற்றினால் மனதை; கட்டி விஷயாந்தரங்களில் செல்லாதபடி கட்டி வைத்து; வீடு இலாது இடைவிடாது உன் திருவடிகளில்; வைத்த வைக்கப்பட்ட; காதல் இன்பம் ஆகுமே பக்தி இன்பத்திற்கு ஈடாகுமோ?