TCV 47

உன்னைக் கண்டு வணங்கும் விதத்தைச் சொல்

798 காரொடொத்தமேனி நங்கள்கண்ண! விண்ணிண்நாதனே! *
நீரிடத்தராவணைக்கிடத்தி யென்பர், அன்றியும் *
ஓரிடத்தையல்லை எல்லையில்லையென்பராதலால் *
சேர்விடத்தைநாயினேன் தெரிந்திறைஞ்சுமாசொலே.
798 kārŏṭu ŏtta meṉi naṅkal̤ kaṇṇa * viṇṇiṉ nātaṉe *
nīr iṭattu arāvaṇaik * kiṭatti ĕṉpar aṉṟiyum **
or iṭattai allai ĕllai * illai ĕṉpar ātalāl *
cervu-iṭattai nāyiṉeṉ * tĕrintu iṟaiñcumā cŏle (47)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

798. O Kanna, you, the king of the sky, have the color of a dark cloud. People say that you are omnipresent and boundless. You who rest on a snake bed on the ocean, I am like a dog—I want to know where you are. I beg you, please tell me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரொடு காளமேகத்தை; ஒத்த மேனி ஒத்த சரீரத்தை உடைய; நங்கள் கண்ண! எங்கள் கண்ணனே!; விண்ணின் விண்ணோர்களுக்கு; நாதனே தலைவனே!; நீர் இடத்து பாற்கடலிலே; அராவணை பாம்புப் படுக்கையிலே; கிடத்தி துயில்கிறாய் என்று; என்பர் ஞானிகள் கூறுவார்கள்; அன்றியும் அதுவுமல்லாமல்; ஓர் இடத்தை நீ எல்லா இடத்திலும்; அல்லை இருக்கிறாய்; எல்லை இல்லை எல்லை என்பதே; என்பர் இல்லை என்பர்; ஆதலால் ஆகவே; சேர்வு அந்த இடங்கள் அணுகமுடியாதவைகளாக; இடத்தை இருப்பதால்; நாயினேன் மிகத் தாழ்ந்த நான்; தெரிந்து தெரிந்துகொள்ளும்படி; இறைஞ்சுமா எனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று; சொலே பிரார்த்திக்கிறேன்