TCV 46

என் இறப்பொடு பிறப்பறுக்கும் வழி என்ன?

797 தோடுபெற்றதண்டுழாய் அலங்கலாடுசென்னியாய்! *
கோடுபற்றியாழியேந்தி அஞ்சிறைப்புள்ளூர்தியால் *
நாடுபெற்றநன்மை நண்ணமில்லையேனும், நாயினேன் *
வீடுபெற்றிறப்பொடும் பிறப்பறுக்குமாசொலே.
797 toṭu pĕṟṟa taṇ tuzhāy * -alaṅkal āṭu cĕṉṉiyāy *
koṭu paṟṟi āzhi enti * añciṟaip pul̤ ūrtiyāl **
nāṭu pĕṟṟa naṉmai * naṇṇam illaiyeṉum nāyiṉeṉ *
vīṭu pĕṟṟu iṟappŏṭum * piṟappu aṟukkumo cŏle (46)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

797. Your hair is adorned with a fresh thulasi garland with beautiful petals. You carry a conch and a discus and you ride on lovely-winged Garudā. I have not received your goodness like the other devotees. I am like a dog. Give me your grace so I will reach Mokshā and not be born again.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோடு பெற்ற இதழ் விரியப் பெற்ற; தண் துழாய் குளிர்ந்த திருத்துழாய்; அலங்கல் மாலை; ஆடு அசைந்தாடும்; சென்னியாய்! தலையை உடையவனே!; கோடு பற்றி பாஞ்சசன்னியம் என்னும் சங்கையும்; ஆழி ஏந்தி சக்கரத்தையும் ஏந்தி; அஞ்சிறைப்புள் அழகிய சிறகையுடைய கருடன் மீது; ஊர்தியால் ஏறி செல்பவனே!; நாடு பெற்ற நன்மை அன்று ஜனங்கள் பெற்ற நன்மையை; நண்ணம் இல்லையேனும் நான் பெறாவிட்டாலும்; நாயினேன் நீசனான நான்; வீடு பெற்று மோக்ஷம் அடைந்து; இறப்பொடும் பிறப்பு இறப்பதும் பிறப்பதுமான; அறுக்குமா ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் உபாயத்தை; சொலே தெரிவிக்க வேண்டுகிறேன்