TCV 48

எல்லோரையும் படைத்தளித்தவன்

799 குன்றில்நின்றுவானிருந்து நீள்கடல்கிடந்து * மண்
ஒன்றுசென்றதொன்றையுண்டு அதொன்றிடந்துபன்றியாய் *
நன்றுசென்றநாளவற்றுள் நல்லுயிர்படைத்து, அவர்க்கு *
அன்றுதேவமைத்தளித்த ஆதிதேவனல்லயே?
799 kuṉṟil niṉṟu vāṉ iruntu * nīl̤ kaṭal kiṭantu * maṇ
ŏṉṟu cĕṉṟu atu ŏṉṟai uṇṭu * atu ŏṉṟu iṭantu paṉṟiyāy **
naṉṟu cĕṉṟa nāl̤ avaṟṟul̤ * nal uyir paṭaittu avarkku *
aṉṟu tevu amaittu al̤itta * ātitevaṉ allaiye? (48)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

799. You stay on the hill of Thiruvenkatam, and in the sky with the gods, and you rest on the wide ocean on Adishesha. You swallowed the earth, you took the land from Mahābali and measured it, and you assumed the form of a boar, split open the earth and brought forth the earth goddess who was hidden. You, the ancient god, created all lives and you gave godliness to the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றில் நின்று திருப்பதி மலையில் நின்றும்; வான் இருந்து பரமபதத்தில் வீற்றிருந்தும்; நீள் கடல் கிடந்து பாற்கடலிலே துயின்றும்; மண் ஒன்று ஒப்பற்ற பூமியை; சென்று திருவிக்கிரமனாய் அளந்தும்; அது ஒன்றை வேறு ஒரு சமயம் அந்த பூமியை; உண்டு வயிற்றில் வைத்தும்; அது ஒன்று இன்னோரு சமயம்; பன்றியாய் வராஹனாய்; இடந்து பூமியைக் குத்தி எடுத்தும்; நன்று சென்ற நன்றாய் சென்ற; நாளவற்றுள் நாட்களிலே; நல் உயிர் நல்ல மனிதர்களை; படைத்து ஸ்ருஷ்டித்தும்; அவர்க்கு அந்த மனிதர்கட்கு; அன்று தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி; தேவு அமைத்து தேவதைகளை அமைத்தும்; அளித்த ஆதிதேவன் அளித்த ழுமுமுதற்கடவுள்; அல்லயே நீயல்லவோ!