TCV 100

பிறவிக்கடலைத் தாண்ட அருள்செய்

851 பிறப்பினோடுபேரிடர்ச் சுழிக்கண்நின்றும்நீங்குமஃது *
இறப்பவைத்தஞானநீசரைக்கரைக்கொடேற்றுமா *
பெறற்கரியநின்னபாத பத்தியானபாசனம் *
பெறற்கரியமாயனே! எனக்குநல்கவேண்டுமே.
851 பிறப்பினோடு பேர் இடர்ச் * சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது *
இறப்ப வைத்த ஞான நீசரைக் * கரைக்கொடு ஏற்றுமா **
பெறற்கு அரிய நின்ன பாத * பத்தி ஆன பாசனம் *
பெறற்கு அரிய மாயனே * எனக்கு நல்க வேண்டுமே (100)
851 piṟappiṉoṭu per iṭarc * cuzhikkaṇ niṉṟum nīṅkum aḵtu *
iṟappa vaitta ñāṉa nīcaraik * karaikkŏṭu eṟṟumā **
pĕṟaṟku ariya niṉṉa pāta * -patti āṉa pācaṉam *
pĕṟaṟku ariya māyaṉe * ĕṉakku nalka veṇṭume (100)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

851. You are Māyan whom no one can reach easily. You save people even if they are evil, forgetting all good deeds, thinking themselves wise and not understanding that births cause them suffering in this world, Give me your grace and make me your devotee so I may worship your feet through devotion for you always.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பெறற்கு தன்முயற்சியினாலே; அரிய பெறமுடியாத; மாயனே! எம்பெருமானே!; பிறப்பினோடு பிறவி துன்பம்; பேரிடர் போன்ற பெரும் துயரங்களான; சுழிக்கண் நின்றும் ஸம்ஸார சக்கரத்திலிருந்து; நீங்கு அஃது விடுபடுவதற்கான உபாயங்களை; இறப்ப வைத்த மறைத்து வைத்த; ஞான நீசரை அல்ப ஞானிகளையும்; கரைக்கொடு கரைசேர்க்கும்; ஏற்றுமா உபாயமாகும்; பாத பத்தி ஆன உன் திருவடிகளில் கைங்கர்யம்; பெறற்கு அரிய நின்ன பெறுவதற்குத் துர்லபமான; பாசனம் பக்தியாகிற பெரும் தனத்தை; எனக்கு நீயே எனக்கு; நல்க வேண்டுமே தந்து அருள வேண்டும்