TCV 99

என்னை உன்னைவிட்டுப் பிரித்திடாதே

850 காட்டிநான்செய்வல்வினை பயன்தனால்மனந்தனை *
நாட்டிவைத்துநல்லவல்ல செய்யவெண்ணினாரென *
கேட்டதன்றியென்னதாவி பின்னைகேள்வ! நின்னொடும் *
பூட்டிவைத்தவென்னை நின்னுள்நீக்கல்பூவைவண்ணனே!
850 kāṭṭi nāṉ cĕy valviṉai * payaṉtaṉāl maṉantaṉai *
nāṭṭi vaittu nalla-alla * cĕyya ĕṇṇiṉār ĕṉa **
keṭṭatu aṉṟi ĕṉṉatu āvi * piṉṉai kel̤va niṉṉŏṭum *
pūṭṭi vaitta ĕṉṉai * niṉṉul̤ nīkkal pūvai vaṇṇaṉe (99)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

850. You, the beloved of Nappinnai, have the color of the kāyām flower. My soul is tied to you. I hear that the messengers of Yama encourage people to be involved in cruel sins, but I have locked you up in my heart with Nappinnai and you save me from committing those sins.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பின்னை கேள்வ! நப்பின்னையின் நாதனே!; பூவை காயாம்பூப்போன்ற; வண்ணனே! நிறமுடையவனே!; என்னது ஆவி என்னுடைய ஆத்மாவை; நின்னொடும் உன்னோடு நிலையான; பூட்டி வைத்த பக்தியுடன் பிணைத்து; என்னை வைத்த என்னை; நான் செய் நான் செய்த; வல் வினை பாவங்களை எனக்கு; காட்டி காட்டி; பயன்றதனால் பலன்களை அநுபவித்தே; மனந்தனை தீரவேண்டும் எனறு என் மனதிற்கு; நாட்டி வைத்து உணர்த்திய பின்; நல்ல அல்ல கொடிய செயல்களை; செய்ய யமதூதர்கள் செய்ய; எண்ணினார் நினைத்திருக்கிறார்கள்; எனக் கேட்டது என்று நான் கேட்டிருப்பது; அன்றி போல் அல்லாமல்; நின்னுள் என்னை உன்னிடமிருந்து; நீக்கல் நீக்காமல் இருக்க வேண்டும்