O Rāmāṉuja! I Cannot Exist Without Praising You
இராமானுச! நின்னைத் துதியாமல் என்னால் இருக்கமுடியவில்லை
3981 போற்றருஞ்சீலத்திராமானுச! * நின்புகழ்தெரிந்து
சாற்றுவனேல்அதுதாழ்வு * அதுதீரில்உன்சீர்தனக்குஓர்
ஏற்றமென்றேகொண்டிருக்கிலு மென்மனம்ஏத்தியன்றி
ஆற்றகில்லாது * இதற்கென்னினைவாயென்றிட்டஞ்சுவனே.