O Rāmāṉuja! Your Glory Makes Me Real.
இராமானுச! நின் புகழே என்னை மெய்க்கின்றது
3967 செய்த்தலைச் சங்கம் செழுமுத்தமீனும் * திருவரங்கர்
கைத்தலத்தாழியும் சங்கமுமேந்தி * நங்கண்முகப்பே
மொய்த்தலைத் துன்னைவிடேனென்றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக்கும்வந்து * இராமானுச! என்னை முற்றும் நின்றே.