O Rāmāṉuja! Grant Me the Grace to Follow in Your Footsteps
இராமானுச! நின் அடியைத் தொடர எனக்கு அருள் செய்
3955 பிடியைத்தொடரும் களிறென்ன * யான்உன்பிறங்கியசீர்
அடியைத்தொடரும்படி நல்கவேண்டும் * அறுசமயச்
செடியைத்தொடரும்மருள்செறிந்தோர்சிதைந்தோடவந்து இப்
படியைத்தொடரும் * இராமனுச! மிக்கபண்டிதனே!