Bowing to Rāmāṉuja, I Dispelled the Bondage of the Twofold Karmas
இராமானுசனைப் பணிந்து இருவினைப் பாசம் போக்கினேன்
3954 இருந்தேனிருவினைப் பாசம்கழற்றி * இன்றியானிறையும்
வருந்தேன்இனி எம்மிராமானுசன் * மன்னுமாமலர்த்தாள்
பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கொன்றும் நன்மை செய்யாப்
பெருந்தேவரைப்பரவும் * பெரியோர்தங்கழல்பிடித்தே.