RNA 53

Rāmāṉuja is He Who Established that All Things Belong to Tirumāl

யாவும் திருமாலினுடையவை என்று நாட்டியவன் இராமானுசன்

3945 அற்புதன் செம்மையிராமானுசன் * என்னையாளவந்த

கற்பகம் கற்றவர்காமுறுசீலன் * கருதிய

பற்பல்லுயிர்களும்பல்லுலகுயாவும்பரனதென்னும்

நற்பொருள்தன்னை * இந்நானிலத்தேவந்துநாட்டினனே.

Text size