Rāmāṉuja is He Who Performed Miraculous Deeds
அற்புதச் செயல்களைச் செய்தவன் இராமானுசன்
3944 பார்த்தான்அறுசமயங்கள்பதைப்ப * இப்பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து *
தீர்த்தானிருவினைதீர்த்து அரங்கன்செய்யதாளிணையோடு
ஆர்த்தான் * இவைஎம்மிராமானுசன்செய்யுமற்புதமே.