Chapter 13

Hiranyan and the man-lion - (ஆயிரக் கண்)

ஹிரண்யனும் மனித-சிங்கமும்
Verses: 2765 to 2765
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PTM 13.53

2765 ஆயிரக்கண்
மன்னவன்வானமும் வானவர்தம்பொன்னும்லகும் *
தன்னுடையதோள்வலியால் கைக்கொண்டதானவனை *
பின்னோரரியுருவமாகி எரிவிழித்து *
கொல்நவிலும்வெஞ்சமத்துக் கொல்லாதே * - வல்லாளன்
மன்னுமணிக்குஞ்சி பற்றிவரவீர்த்து *
தன்னுடையதாள்மேல் கிடாத்தி * - அவனுடைய
பொன்னகலம்வள்ளுகிரால் போழ்ந்துபுகழ்படைத்த *
மின்னிலங்கும்ஆழிப்படைத் தடக்கைவீரனை *
2765 ஆயிரக் கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும் *
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை *
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து *
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே * வல்லாளன்
மன்னு மணிக் குஞ்சி பற்றி, வர ஈர்த்து *
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி * அவனுடைய
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ் படைத்த *
மின் இலங்கும் ஆழிப் படைத் தடக் கை வீரனை * 55
2765 āyirak kaṇ
maṉṉavaṉ vāṉamum vāṉavar tam pŏṉ ulakum *
taṉṉuṭaiya tol̤ valiyāl kaikkŏṇṭa tāṉavaṉai *
piṉ or ari uruvam āki ĕri vizhittu *
kŏl navilum vĕm camattuk kŏllāte * vallāl̤aṉ
maṉṉu maṇik kuñci paṟṟi, vara īrttu *
taṉṉuṭaiya tāl̤ mel kiṭātti * avaṉuṭaiya
pŏṉ akalam val̤ ukirāl pozhntu pukazh paṭaitta *
miṉ ilaṅkum āzhip paṭait taṭak kai vīraṉai * 55

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2765. She says, “Hiranyan with his strong hands fought with thousand-eyed Indra, king of the gods and the gods and took over Indra’s world and the golden world of the gods. Our god with a discus in his mighty hand took the form of a lion went to Hiranyan with fiery eyes and fought with him, pulling the Asuran by the hair, sitting him on his thigh, and splitting open his chest with his sharp claws. (55)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயிரம் கண் ஆயிரங்கண்களுடைய; மன்னவன் இந்திரனின்; வானமும் ஸ்வர்க்கலோகத்தையும்; வானவர் தம் தேவதைகளின்; பொன் உலகும் பொன் உலகங்களையும்; தன்னுடைய தன்னுடைய திரண்ட; தோள் தோள்களின்; வலியால் வலிமையால்; கைக் கொண்ட வசமாக்கிக்கொண்ட; தானவனை அசுரனை; பின் ஓர் பின்பு ஒரு சமயம்; அரி உருவம் ஆகி நரசிம்மமூர்த்தியாக அவதரித்து; எரி விழித்து நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து; கொல் நவிலும் கொடிய; வெம் சமத்து போர்களத்தில்; கொல்லாதே கொல்லாமல்; வல்லாளன் மஹாபலசாலியான அவ்வசுரனின்; மன்னு மணி மணிமயமான கிரீடத்துடன் கூடிய; குஞ்சி பற்றி தலை முடியைப் பற்றி; வர ஈர்த்து இழுத்து; தன்னுடைய தாள் மேல் தன் கால் மேல்; கிடாத்தி படுக்க வைத்து; அவனுடைய அவனுடைய; பொன் அகலம் பரந்த மார்பை; வள் உகிரால் கூர்மையான நகங்களாலே; போழ்ந்து கீறிக் கிழித்து பிரஹ்லாதனை காப்பாற்றியதால்; உண்டான புகழ் உண்டான புகழையுடைய; மின் இலங்கு மின்னல் போன்ற ஒளியுடைய; ஆழிப் படை சக்கராயுதத்தை; தடக் கை தன் திண்மையான; வீரனை கையிலுடைய வீரனை
āyiram kaṇ mannavan vānamum the swargalŏka (heaven) belonging to the thousand eyed indhra; vānavar tham ponnulagum the divine words of (other) dhĕvathās (celestial deities); thannudaiya thŏl̤ valiyāl̤ kaikkoṇda dhānavanai hiraṇyāsura who made them his, through the strength of his shoulders; pin after passage of some time; ŏr ari uruvam āgi incarnating as an incomparable narasinga mūrththy (lion face and human body); eri vizhiththu looking with fiery eyes; kol navilum vem samaththuk kollādhĕ not killing in battlefield where people are killed; vallāl̤an that hugely strong demon’s; mannu maṇi kunji paṝi vara īrththu pulling closely, the hair which is decorated with crown made of gems; thannudaiya thāl̤ mĕl kidāththi making (hiraṇya) to lie on his lap; avanudaiya his; pon agalam beautiful chest; val̤ ugirāl pŏzhndhu parted asunder with his sharp nails; pugazh padaiththa getting the fame (of having protected his follower, prahlādha); min ilangum āzhi padai thadaikkai vīranai being a great warrior who has the divine chakrāyudham (disc) which is radiant like lightning