Chapter 13

Hiranyan and the man-lion - (ஆயிரக் கண்)

ஹிரண்யனும் மனித-சிங்கமும்
Verses: 2765 to 2765
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 13.53
    2765 ஆயிரக் கண்
    மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும் *
    தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை *
    பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து *
    கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே * வல்லாளன்
    மன்னு மணிக் குஞ்சி பற்றி, வர ஈர்த்து *
    தன்னுடைய தாள் மேல் கிடாத்தி * அவனுடைய
    பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ் படைத்த *
    மின் இலங்கும் ஆழிப் படைத் தடக் கை வீரனை * 55