Your browser does not support the audio element.
audio
1758 பொன்னிவர்மேனிமரகதத்தின்
பொங்கிளஞ்சோதியகலத்துஆரம்
மின் * இவர்வாயில்நல்வேதமோதும்
வேதியர்வானவராவர்தோழீ! *
என்னையும்நோக்கிஎன்னல்குலும்நோக்கி
ஏந்திளங்கொங்கையும்நோக்குகின்றார் *
அன்னையென்னோக்குமென்றஞ்சுகின்றேன்
அச்சோஒருவரழகியவா! (2)
1759 தோடவிழ்நீலம்மணங்கொடுக்கும்
சூழ்புனல்சூழ்குடந்தைக்கிடந்த *
சேடர்கொலென்றுதெரிக்கமாட்டேன்
செஞ்சுடராழியும்சங்கும்ஏந்தி *
பாடகமெல்லடியார்வணங்கப்
பன்மணிமுத்தொடுஇலங்குசோதி *
ஆடகம்பூண்டுஒருநான்குதோளும்
அச்சோஒருவரழகியவா!
1760 வேயிருஞ்சோலைவிலங்கல்சூழ்ந்த
மெய்யமணாளர், இவ்வையமெல்லாம் *
தாயினநாயகராவர்தோழீ!
தாமரைக்கண்களிருந்தவாறு *
சேயிருங்குன்றம்திகழ்ந்ததொப்பச்
செவ்வியவாகிமலர்ந்தசோதி *
ஆயிரம்தோளொடுஇலங்குபூணும்
1761 வம்பவிழும்துழாய்மாலைதோள்மேல்
கையன ஆழியும்சங்கும்ஏந்தி *
நம்பர்நம்இல்லம்புகுந்துநின்றார்
நாகரிகர்பெரிதும்இளையர் *
செம்பவளம்இவர்வாயின்வண்ணம்
தேவரிவரதுஉருவம்சொல்லில் *
அம்பவளத்திரளேயும்ஒப்பர்
1762 கோழியும்கூடலும்கோயில்கொண்ட
கோவலரேஒப்பர், குன்றமன்ன *
பாழியந்தோளும் ஓர்நான்குடையர்
பண்டு இவர்தம்மையும்கண்டறியோம் *
வாழியரோஇவர்வண்ணம்எண்ணில்
மாகடல்போன்றுளர், கையில்வெய்ய *
ஆழியொன்றேந்திஓர்சங்குபற்றி
1763 வெஞ்சினவேழம்மருப்பொசித்த
வேந்தர்கொல்? ஏந்திழையார்மனத்தை *
தஞ்சுடையாளர்கொல்? யான்அறியேன்
தாமரைக்கண்கள்இருந்தவாறு *
கஞ்சனையஞ்சமுன்கால்விசைத்த
காளையாரவர், கண்டார்வணங்கும் *
அஞ்சனமாமலையேயும்ஒப்பர்
1764 பிணியவிழ்தாமரைமொட்டலர்த்தும்
பேரருளாளர்கொல்? யான்அறியேன் *
பணியும்என்நெஞ்சமிதென்கொல்? தோழீ!
பண்டுஇவர்தம்மையும்கண்டறியோம் *
அணிகெழுதாமரையன்னகண்ணும் *
அங்கையும்பங்கயம், மேனிவானத்து *
அணிகெழுமாமுகிலேயும்ஒப்பர்
1765 மஞ்சுயர்மாமதிதீண்டநீண்ட
மாலிருஞ்சோலைமணாளர்வந்து * என்
நெஞ்சுள்ளும்கண்ணுள்ளும்நின்றுநீங்கார்
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன் *
மஞ்சுயர்பொன்மலைமேலெழுந்த
மாமுகில்போன்றுளர்வந்துகாணீர் *
அஞ்சிறைப்புள்ளுமொன்றுஏறிவந்தார்
1766 எண்திசையும்எறிநீர்க்கடலும்
ஏழுலகும்உடனேவிழுங்கி *
மண்டிஓராலிலைப்பள்ளிகொள்ளும்
மாயர்கொல்? மாயம்அறியமாட்டேன் *
கொண்டல்நன்மால்வரையேயும்ஒப்பர்
கொங்கலர்தாமரைக்கண்ணும்வாயும் *
அண்டத்தமரர்பணியநின்றார்
1767 அன்னமும்கேழலும்மீனுமாய
ஆதியைநாகையழகியாரை *
கன்னிநன்மாமதிள்மங்கைவேந்தன்
காமருசீர்க்கலிகன்றி * குன்றா
இன்னிசையால்சொன்னசெஞ்சொல்மாலை
ஏழுமிரண்டுமொரொன்றும்வல்லார் *
மன்னவராய்உலகாண்டு மீண்டும்
வானவராய்மகிழ்வெய்துவரே. (2)