PT 9.1.2

கஜேந்திரஜனுக்கு அருளியவன் இடம் இது

1749 கவளமாகதத்தகரியுய்யப் பொய்கைக்
கராம்கொளக்கலங்கி * உள்நினைந்து
துவள மேல்வந்துதோன்றி வன்முதலை
துணிபடச்சுடுபடைதுரந்தோன் *
குவளைநீள்முளரிகுமுதம்ஒண்கழுநீர் *
கொய்ம்மலர்நெய்தலொண்கழனி *
திவளும்மாளிகைசூழ்செழுமணிப்புரிசைத்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.
1749 kaval̤a mā katatta kari uyyap * pŏykaik
karām kŏl̤ak kalaṅki * ul̤ niṉaintu
tuval̤a * mel vantu toṉṟi vaṉ mutalai
tuṇipaṭac ** -cuṭu paṭai turantoṉ-
kuval̤ai nīl̤ mul̤ari kumutam ŏṇ kazhunīr *
kŏym malar nĕytal ŏṇ kazhaṉi *
tival̤um māl̤ikai cūzh cĕzhu maṇip puricait *
tirukkaṇṇaṅkuṭiyul̤ niṉṟāṉe-2

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1749. When Gajendra, the elephant went to get flowers for the god, a crocodile caught his feet in the pond and he worshiped the lord raising his trunk and asked for help, and our god came, threw his heroic discus, killed the evil crocodile and saved him. The almighty god stays in Thirukkannangudi surrounded by precious palaces with jewel-studded walls where in the flourishing fields kuvalai flowers, blossoming lotuses, lovely kazuneer flowers and neydal flowers bloom.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கவள கவள உணவு கொள்ளும்; மா கதத்த கரி மத நீர் உடைய யானை; பொய்கை குளத்திலிருக்கும்; கராம் முதலையினாலே; கொளக் கலங்கி கௌவப்பட்டு கலங்கி; உள் நினைந்து பெருமானை நினைத்து; துவள துவளும் போது; உய்ய அதைக் காப்பாற்ற; மேல் வந்து தோன்றி அங்கு வந்து தோன்றி; வன் முதலை வலிய முதலை; துணிபட துண்டாகும்படி; சுடு ஒளியுள்ள வெப்பமுடைய; படை சக்கரத்தை; துரந்தோன் பிரயோகித்தான்; குவளை கருநெய்தல் பூ; நீள் முளரி தாமரைப் பூ; குமுதம் ஒண் ஆம்பல் பூ; கழு நீர் செங்கழு நீர் பூ; கொய்ம் பறிக்கும்படியான; நெய்தல் நெய்தல்; மலர் ஒண் மலர் ஆகிய அழகிய; கழனி வயல்களையுடைய; திவளும் ஒளிமயமான; மாளிகை சூழ் மாளிகைகள் சூழ்ந்த; செழு மணி ரத்னமயமான; புரிசை மதிள்களை உடைய; திருக்கண்ணங்குடியுள் திருக்கண்ணங்குடியுள்; நின்றானே நின்றானே