PT 9.1.3

மச்சாவதாரம் எடுத்தவன் இடம் இது

1750 வாதைவந்தடரவானமும்நிலனும்
மலைகளும்அலைகடல்குளிப்ப *
மீதுகொண்டுகளும்மீனுருவாகி
விரிபுனல்வரியகட்டொளித்தோன் *
போதலர்புன்னைமல்லிகைமௌவல்
புதுவிரைமதுமலரணைந்து *
சீதவொண்தென்றல்திசைதொறும்கமழும்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.
1750 vātai vantu aṭara vāṉamum nilaṉum *
malaikal̤um alai kaṭal kul̤ippa *
mītu kŏṇṭu ukal̤um mīṉ uru āki *
viri puṉal vari akaṭṭu ŏl̤ittoṉ- **
potu alar puṉṉai mallikai mauval *
putu virai matu malar aṇaintu *
cīta ŏṇ tĕṉṟal ticaitŏṟum kamazhum *
tirukkaṇṇaṅkuṭiyul̤ niṉṟāṉe-3

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1750. The almighty god who took the form of a fish and saved the world from the storm at the end of the eon when darkness covered the world and the sky, earth and mountains all plunged into the ocean rolling with waves - stays in Thirukkannangudi where blooming punnai trees, jasmine and alli flowers dripping with honey spread their fragrance and the lovely cool breeze blows everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாதை பிரளய காலத்தில்; வந்து அடர கஷ்டம் வந்து சேர; வானமும் நிலனும் வானமும் பூமியும்; மலைகளும் மலைகளும்; அலை கடல் அலைகடலில்; குளிப்ப மூழ்கிவிட; உகளும் மீன் களிப்புடன் கூடிய மீன்; உரு ஆகி உரு ஆகி அனைத்தையும்; மீது கொண்டு தன் மீது ஏறிட்டுக் கொண்டு; விரி புனல் பரந்த வெள்ள நீரை; வரி அகட்டு அழகிய தன் வயிற்றிலே; ஒளித்தோன் அடக்கின எம்பெருமான்; போது அலர் உரிய காலத்தில் விகஸிக்கும்; புன்னை மல்லிகை புன்னை மல்லிகை; மௌவல் மௌவல்; புது விரை புதிய மணமும்; மதுமலர் தேனையுமுடைய மலர்களிலே; அணைந்து அளாவி; சீத ஒண் தென்றல் குளிர்ந்த தென்றல் காற்று; திசைதொறும் எல்லா திசைகளிலும்; கமழும் கமழும்; திருக்கண்ணங்குடியுள் திருக்கண்ணங்குடியுள்; நின்றானே நின்றானே