Chapter 1

Thirukkannangudi - (வங்க மா)

திருக்கண்ணங்குடி
Thirukkannangudi - (வங்க மா)

The deity enshrined at Thirukannangudi is Syamalameni Perumal, also known as Lokanathan. The Thayar is Aravindavalli. This temple is one of the five Krishna Kshetrams.

திருக்கண்ணங்குடியில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ளவர் சியாமளமேனிப் பெருமாள். லோகநாதன் என்றும் பெயர். தாயார் அரவிந்தவல்லி. கிருஷ்ண க்ஷேத்ரங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று.

Verses: 1748 to 1757
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
  • PT 9.1.1
    1748 ## வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய *
    வாள் அரவின் அணை மேவி *
    சங்கம் ஆர் அம் கைத் தட மலர் உந்தித் *
    சாம மா மேனி என் தலைவன் **
    அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் *
    அருங் கலை பயின்று * எரி மூன்றும்
    செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 1
  • PT 9.1.2
    1749 கவள மா கதத்த கரி உய்யப் * பொய்கைக்
    கராம் கொளக் கலங்கி * உள் நினைந்து
    துவள * மேல் வந்து தோன்றி வன் முதலை
    துணிபடச் ** சுடு படை துரந்தோன்
    குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் *
    கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி *
    திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 2
  • PT 9.1.3
    1750 வாதை வந்து அடர வானமும் நிலனும் *
    மலைகளும் அலை கடல் குளிப்ப *
    மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி *
    விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் **
    போது அலர் புன்னை மல்லிகை மௌவல் *
    புது விரை மது மலர் அணைந்து *
    சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 3
  • PT 9.1.4
    1751 வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி *
    வெள் எயிற்று ஒள் எரித் தறு கண் *
    பன்றி ஆய் அன்று பார் மகள் பயலை *
    தீர்த்தவன் பஞ்சவர் பாகன் **
    ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து *
    உயர் கொடி ஒளி வளர் மதியம் *
    சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 4
  • PT 9.1.5
    1752 மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய் *
    மூவடி நீரொடும் கொண்டு *
    பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக *
    பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன் **
    அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து *
    அலை புனல் இலைக் குடை நீழல் *
    செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 5
  • PT 9.1.6
    1753 மழுவினால் அவனி அரசை மூவெழுகால் *
    மணி முடி பொடிபடுத்து * உதிரக்
    குழுவு வார் புனலுள் குளித்து * வெம் கோபம்
    தவிர்ந்தவன் குலை மலி கதலி **
    குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும் *
    குளிர் தரு சூத மாதவியும் *
    செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 6
  • PT 9.1.7
    1754 வான் உளார் அவரை வலிமையால் நலியும் *
    மறி கடல் இலங்கையார் கோனை *
    பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப் *
    பரு முடி உதிர வில் வளைத்தோன் **
    கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆடக் *
    கண முகில் முரசம் நின்று அதிர *
    தேன் உலா வரி வண்டு இன் இசை முரலும் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 7
  • PT 9.1.8
    1755 அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை *
    அஞ்சிடாதே இட * அதற்குப்
    பெரிய மா மேனி அண்டம் ஊடுருவப் *
    பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன் **
    வரையின் மா மணியும் மரதகத் திரளும் *
    வயிரமும் வெதிர் உதிர் முத்தும் *
    திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 8
  • PT 9.1.9
    1756 பன்னிய பாரம் பார் மகட்கு ஒழியப் *
    பாரத மா பெரும் போரில் *
    மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர் *
    மைத்துனற்கு உய்த்த மா மாயன் **
    துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும் *
    சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் *
    தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானே 9
  • PT 9.1.10
    1757 ## கலை உலா அல்குல் காரிகைதிறத்துக் *
    கடல் பெரும் படையொடும் சென்று *
    சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற *
    திருக்கண்ணங்குடியுள் நின்றானை **
    மலை குலாம் மாட மங்கையர் தலைவன் *
    மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
    உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும் *
    வல்லவர்க்கு இல்லை நல்குரவே 10