Chapter 9

Thirukkannapuram 9 - (கைம் மான)

திருக்கண்ணபுரம் 9
Thirukkannapuram 9 - (கைம் மான)
The āzhvār expresses his experience of reaching and being saved by Sowriraja Perumal of Thirukannapuram. He firmly instructs his mind to think of no one else but this Lord, emphasizing his unwavering devotion and commitment.
திருக்கண்ணபுரத்து சவுரிராஜப் பெருமாளைத் தாம் அடைந்து உய்ந்த செய்தியைப் புலப்படுத்தி, அவரைத் தவிர வேறு யாரையும் நினையாதிருக்கும்படி ஆழ்வார் தம் மனத்திற்கு உறுதி கூறுகிறார்.
Verses: 1728 to 1737
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
  • PT 8.9.1
    1728 ## கைம் மான மத யானை * இடர் தீர்த்த கரு முகிலை *
    மைம் மான மணியை * அணி கொள் மரதகத்தை **
    எம்மானை எம் பிரானை ஈசனை * என் மனத்துள்
    அம்மானை * அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே 1
  • PT 8.9.2
    1729 தரு மான மழை முகிலைப் * பிரியாது தன் அடைந்தார் *
    வரும் மானம் தவிர்க்கும் * மணியை அணி உருவில் **
    திருமாலை அம்மானை * அமுதத்தைக் கடல் கிடந்த
    பெருமானை * அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே 2
  • PT 8.9.3
    1730 விடை ஏழ் அன்று அடர்த்து * வெகுண்டு விலங்கல் உற *
    படையால் ஆழி தட்ட * பரமன் பரஞ்சோதி **
    மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் * கண்ணபுரம் ஒன்று
    உடையானுக்கு * அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? 3
  • PT 8.9.4
    1731 ## மிக்கானை * மறை ஆய் விரிந்த விளக்கை * என்னுள்
    புக்கானைப் * புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை **
    தக்கானைக் கடிகைத் * தடங் குன்றின்மிசை இருந்த *
    அக்காரக் கனியை * அடைந்து உய்ந்துபோனேனே 4
  • PT 8.9.5
    1732 வந்தாய் என் மனத்தே * வந்து நீ புகுந்த பின்னை *
    எந்தாய் போய் அறியாய் * இதுவே அமையாதோ? **
    கொந்து ஆர் பைம் பொழில் சூழ் * குடந்தைக் கிடந்து உகந்த
    மைந்தா * உன்னை என்றும் * மறவாமைப் பெற்றேனே 5
  • PT 8.9.6
    1733 எஞ்சா வெம் நரகத்து * அழுந்தி நடுங்குகின்றேற்கு *
    அஞ்சேல் என்று அடியேனை * ஆட்கொள்ள வல்லானை **
    நெஞ்சே நீ நினையாது * இறைப்பொழுதும் இருத்திகண்டாய் *
    மஞ்சு ஆர் மாளிகை சூழ் * வயல் ஆலி மைந்தனையே 6
  • PT 8.9.7
    1734 பெற்றார் பெற்று ஒழிந்தார் * பின்னும் நின்று அடியேனுக்கு *
    உற்றான் ஆய் வளர்த்து * என் உயிர் ஆகி நின்றானை **
    முற்றா மா மதி கோள் விடுத்தானை * எம்மானை *
    எத்தால் யான் மறக்கேன்? * இது சொல் என் ஏழை நெஞ்சே 7
  • PT 8.9.8
    1735 கற்றார் பற்று அறுக்கும் * பிறவிப் பெருங் கடலே *
    பற்றா வந்து அடியேன் * பிறந்தேன் பிறந்த பின்னை **
    வற்றா நீர் வயல் சூழ் * வயல் ஆலி அம்மானைப்
    பெற்றேன் * பெற்றதுவும் * பிறவாமை பெற்றேனே 8
  • PT 8.9.9
    1736 கண் ஆர் கண்ணபுரம் * கடிகை கடி கமழும் *
    தண் ஆர் தாமரை சூழ் * தலைச்சங்கம் மேல்திசையுள் **
    விண்ணோர் நாண்மதியை * விரிகின்ற வெம் சுடரை *
    கண் ஆரக் கண்டுகொண்டு * களிக்கின்றது இங்கு என்றுகொலோ? 9
  • PT 8.9.10
    1737 ## செரு நீர வேல் வலவன் * கலிகன்றி மங்கையர் கோன் *
    கரு நீர் முகில் வண்ணன் * கண்ணபுரத்தானை **
    இரு நீர் இன் தமிழ் * இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் *
    வரும் நீர் வையம் உய்ய * இவை பாடி ஆடுமினே 10