Your browser does not support the audio element.
audio
1738 வண்டார்பூமாமலர்மங்கை மணநோக்க
முண்டானே! * உன்னைஉகந்துகந்து உன்தனக்கே
தொண்டானேற்கு * என்செய்கின்றாய்? சொல்லு நால்வேதம்
கண்டானே! * கண்ணபுறத்துறையம்மானே! (2)
1739 பெருநீரும்விண்ணும் மலையும்உலகேழும் *
ஒருதாராநின்னுளொடுக்கிய நின்னையல்லால் *
வருதேவர்மற்றுளரென்று என்மனத்திறையும்
கருதேன்நான் * கண்ணபுரத்துறையம்மானே!
1740 மற்றும்ஓர்தெய்வம்உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் * உற்றதும் உன்னடியார்க்கடிமை *
மற்றெல்லாம்பேசிலும் நின்திருவெட்டெழுத்தும்
கற்றுநான் * கண்ணபுரத்துறையம்மானே! (2)
1741 பெண்ணானாள் பேரிளங்கொங்கையினாரழல்போல் *
உண்ணாநஞ்சுண்டுகந்தாயை உகந்தேன்நான் *
மண்ணாளா! வாள்நெடுங்கண்ணி மதுமலராள்
கண்ணாளா! * கண்ணபுரத்துறையம்மானே!
1742 பெற்றாரும்சுற்றமும்என்று இவைபேணேன்நான் *
மற்றாரும்பற்றிலேன் ஆதலால்நின்னடைந்தேன் *
உற்றானென்றுஉள்ளத்துவைத்து அருள்செய்கண்டாய் *
கற்றார்சேர் கண்ணபுரத்துறையம்மானே!
1743 ஏத்திஉன்சேவடி எண்ணியிருப்பாரை *
பார்த்திருந்துஅங்கு நமன்தமர்பற்றாது *
சோத்தநாமஞ்சுதும்என்று தொடாமைநீ
காத்திபோல் * கண்ணபுரத்துறையம்மானே!
1744 வெள்ளைநீர்வெள்ளத்து அணைந்தஅரவணைமேல் *
துள்ளுநீர்மெள்ளத் துயின்றபெருமானே! *
வள்ளலே! உன்தமர்க்குஎன்றும்நமன்தமர்
கள்ளர்போல் * கண்ணபுரத்துறையம்மானே!
1745 மாணாகி வையமளந்ததுவும் * வாளவுணன்
பூணாகம்கீண்டதுவும் ஈண்டுநினைந்திருந்தேன் *
பேணாதவல்வினையேன் இடரெத்தனையும்
காணேன்நான் * கண்ணபுரத்துறையம்மானே!
1746 நாட்டினாய்என்னை உனக்குமுன்தொண்டாக *
மாட்டினேன்அத்தனையே கொண்டுஎன்வல்வினையை *
பாட்டினால்உன்னை என்நெஞ்சத்திருந்தமை
காட்டினாய் * கண்ணபுரத்துறையம்மானே!
1747 கண்டசீர்க் கண்ணபுரத்துறையம்மானை *
கொண்டசீர்த்தொண்டன் கலியனொலிமாலை *
பண்டமாய்ப்பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் *
அண்டம்போய்ஆட்சி அவர்க்கதறிந்தோமே. (2)