Chapter 8

Thiruvazhundur 4 - (செங் கமல)

திருவழுந்தூர் 4
Thiruvazhundur 4 - (செங் கமல)
The āzhvār, with a melting heart, sings in praise of Amaruviyappan of Thiruvazhundur, declaring Him to be the Lord who has taken the ten Avatars (Dasavataras).
திருவழுந்தூர் மேவிய ஆமருவியப்பனே தசாவதாரங்களை எடுத்த திருமால் என்று கூறி உள்ளம் உருகிப் பாடுகிறார் ஆழ்வார்.
Verses: 1618 to 1627
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
  • PT 7.8.1
    1618 ## செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன் *
    திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த *
    வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும் *
    வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின் **
    எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் * ஐந்து
    வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை *
    அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 1
  • PT 7.8.2
    1619 முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண *
    முனிவரொடு தானவர்கள் திசைப்ப * வந்து
    பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் *
    பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின் **
    செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் *
    சங்கம் அவை முரலச் செங் கமல மலரை ஏறி *
    அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 2
  • PT 7.8.3
    1620 குலத் தலைய மத வேழம் பொய்கை புக்குக் *
    கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று *
    நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன *
    நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின் **
    மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு *
    வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய *
    அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 3
  • PT 7.8.4
    1621 சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கண் குன்றம் *
    திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றி ஆகி *
    இலங்கு புவி மடந்தை தனை இடந்து புல்கி *
    எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின் **
    புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்க *
    பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல *
    அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 4
  • PT 7.8.5
    1622 சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகித் *
    திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு *
    மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
    மாள * உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின் **
    இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை *
    ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல் *
    அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 5
  • PT 7.8.6
    1623 வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி *
    மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி *
    தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித் *
    தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் **
    தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதிச் *
    செழு மாட மாளிகைகள் கூடம்தோறும் *
    ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 6
  • PT 7.8.7
    1624 பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகிப் *
    பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் *
    அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ *
    அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின் **
    செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் *
    திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க *
    அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 7
  • PT 7.8.8
    1625 கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு
    பறித்து * மழ விடை அடர்த்துக் குரவை கோத்து *
    வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த
    தயிர் வெண்ணெய் * உண்டு உகந்த மாயோன் காண்மின் **
    செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத் *
    திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் *
    அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 8
  • PT 7.8.9
    1626 ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் *
    ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற *
    நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி *
    நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின் **
    சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் *
    திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும் *
    ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து *
    அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 9
  • PT 7.8.10
    1627 ## பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய்ப் * பாரைப்
    படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை *
    அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் *
    அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை **
    கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் *
    கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் *
    ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் *
    ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே 10