Chapter 2

Thirunaraiyur 9 - (புள் ஆய்)

திருநறையூர் 9
Thirunaraiyur 9 - (புள் ஆய்)
The āzhvār joyfully expresses his deep attachment and devotion towards Thirunaraiyur Nambi in these verses.
திருநறையூர் நம்பியின்பால் தமக்குள்ள ஆழ்ந்த பற்றினை ஈண்டுப் பரக்கக் கூறி மகிழ்கிறார் ஆழ்வார்.
Verses: 1558 to 1567
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and be happy with the Gods
  • PT 7.2.1
    1558 ## புள் ஆய் ஏனமும் ஆய்ப் புகுந்து * என்னை உள்ளம் கொண்ட *
    கள்வா என்றலும் * என் கண்கள் நீர்கள் சோர்தருமால் **
    உள்ளே நின்று உருகி * நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் *
    நள்ளேன் உன்னை அல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ 1
  • PT 7.2.2
    1559 ஓடா ஆள் அரியின் * உரு ஆய் மருவி * என் தன்
    மாடே வந்து * அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா **
    பாடேன் தொண்டர் தம்மைக் * கவிதைப் பனுவல் கொண்டு *
    நாடேன் உன்னை அல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ 2
  • PT 7.2.3
    1560 எம்மானும் எம் அனையும் * என்னைப் பெற்று ஒழிந்ததற்பின் *
    அம்மானும் அம்மனையும் * அடியேனுக்கு ஆகி நின்ற **
    நல் மான ஒண் சுடரே * நறையூர் நின்ற நம்பீ * உன்
    மைம் மான வண்ணம் அல்லால் * மகிழ்ந்து ஏத்தமாட்டேனே 3
  • PT 7.2.4
    1561 சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் * உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
    உறைவாய் * என் நெஞ்சின் உள்ளே * உறைவாய் உறைந்தது தான் **
    அறியாது இருந்தறியேன் * அடியேன் அணி வண்டு கிண்டும் *
    நறை வாரும் பொழில் சூழ் * நறையூர் நின்ற நம்பீயோ 4
  • PT 7.2.5
    1562 நீண்டாயை வானவர்கள் * நினைந்து ஏத்திக் காண்பு அரிதால் *
    ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு * நான் அடிமை
    பூண்டேன் ** என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் *
    நாண் தான் உனக்கு ஒழிந்தேன் * நறையூர் நின்ற நம்பீயோ 5
  • PT 7.2.6
    1563 எம் தாதை தாதை அப்பால் * எழுவர் பழ அடிமை
    வந்தார் * என் நெஞ்சின் உள்ளே * வந்தாயைப் போகல் ஒட்டேன் **
    அந்தோ! என் ஆர் உயிரே * அரசே அருள் எனக்கு *
    நந்தாமல் தந்த எந்தாய்! * நறையூர் நின்ற நம்பீயோ 6
  • PT 7.2.7
    1564 மன் அஞ்ச ஆயிரம் தோள் * மழுவில் துணித்த மைந்தா *
    என் நெஞ்சத்துள் இருந்து * இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர் **
    வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் * வளைத்து வைத்தேன் *
    நல் நெஞ்ச அன்னம் மன்னும் * நறையூர் நின்ற நம்பீயோ 7
  • PT 7.2.8
    1565 எப்போதும் பொன் மலர் இட்டு * இமையோர் தொழுது * தங்கள்
    கைப்போது கொண்டு இறைஞ்சிக் * கழல்மேல் வணங்க நின்றாய் **
    இப்போது என் நெஞ்சின் உள்ளே * புகுந்தாயைப் போகல் ஒட்டேன் *
    நல் போது வண்டு கிண்டும் * நறையூர் நின்ற நம்பீயோ 8
  • PT 7.2.9
    1566 ஊன் நேர் ஆக்கை * தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் *
    யான் ஆய் என் தனக்கு ஆய் * அடியேன் மனம் புகுந்த
    தேனே ** தீங் கரும்பின் தெளிவே * என் சிந்தை தன்னால் *
    நானே எய்தப் பெற்றேன் * நறையூர் நின்ற நம்பீயோ 9
  • PT 7.2.10
    1567 ## நல் நீர் வயல் புடை சூழ் * நறையூர் நின்ற நம்பியை *
    கல் நீர மால் வரைத் தோள் * கலிகன்றி மங்கையர் கோன் **
    சொல் நீர சொல் மாலை * சொல்லுவார்கள் சூழ் விசும்பில் *
    நல் நீர்மையால் மகிழ்ந்து * நெடுங் காலம் வாழ்வாரே 10